பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 சலோம்

பல புத்தம் புதிய பொருள்களை எனக்கு நன்கொடையாக அனுப்பி வைத்திருக்கிறார். அவர், எனது பகையாகிய காப்படோ சியா மன்னனை உரோமுக்கு அழைப்பதாகவும் உறுதி கூறி இருக்கிறார். ஒருவேளை உரோமாபுரியிலே அவர் அந்த மன்னைக் கொல்லலாம். நினைப்பதை எல்லாம் செய்து முடிக்கக் கூடிய அனைத்தும் வல்லவர் அல்லவா அவர்? அவ்வாறு இருக் கையில் நான் மகிழ்ச்சியாகவும் களிப்புடனும் இருப்பதற்கு என்ன குறை? நான் உவகையோடு இருக்கிறேன். எனது இன்பத் திற்குக் குறுக்கே நிற்கக்கூடிய பொருள் எதுவுமே இல்லை.

அறிவனுடைய குரல் :

அவனை இந்த அரியணையிலே உட்கார வைப்பார்கள். அவன் சிவப்பு, செந்நில நிற உடைகளை அணிந்திருப்பான். கையிலே பொற்கிண்ணம் ஒன்று தாங்கி இருப்பான். அதில் அவனுடைய குற்றங்களும் களங்கங்களும் நிறைந்திருக்கும். தேவ தூதன் அவனைக் கொல்லுவான். அவனுடைய பிணத்தைப் புழுக்கள் தின்னும்.

மன்னி :

உங்களைப் பற்றித்தான் கேட்டீர்களா என்ன சொல்லு கிறான் என்று! உங்கள் பிணைத்தைப் புழுக்கள் தின்னுமாம்.

மன்னன் :

என்னைப்பற்றி இல்லை. என்னைப்பற்றி ஒரு சொல்கூட அவன் பேசவதில்லை. என் எதிரியாகிய காப்படோசியா மன்ன னைப்பற்றியே அவன் பேசுகிறான். அவனைத்தான் புழுக்கள் உண்ணும், என்னையன்று. அண்ணியைக் திருமணம் செய்து கொண்டதன் மூலம் பெரும் தீங்கு செய்துவிட்டேன் என்பதைத் தவிர, எனக்குப் பகையான இந்த முற்றுணர்ந்தோன் ஒன்றுமே சொல்லுவதில்லை. உன்னைக் திருமணம் செய்துகொண்டது தெடர்பாக அவன் சொல்வது சரியாக இருக்கலாம் நீ மலடியாக இருப்பதே அதற்குச் சான்று.