பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 58

மன்னி :

நானா? மலடி நானா? எப்பொழுதும் என் மகளையே

உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் நீங்களா இப்படிச் சொல்லுவது?

இது தவறு; எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. உங்களுக்கோ ஒரு குழந்தை கூட இல்லை. நீங்கள் தான் மலடு, நான் இல்லை.

மன்னன் :

போதும், பெண்ணே நீ மலடிதான், நான் சொல்லுகிறேன். உன்னிடமிருந்து எனக்கு ஒரு குழந்தைகூடப் பிறக்கவில்லையே! நமது திருமணம் முறையான திருமணம் அல்லவென்று முற் றுணர்ந்தோன் சொல்லுகிறான். பழியான இந்தத் திருமணத்தின் மூலம் பெருந் தீமைகள் விளையும் என்று அவன் கூறுகிறான்.... அது சரியோ, என்னவோ? எனக்கு அச்சமாக இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி இப்பொழுது பேசுவதற்கு நேரம் இல்லை. கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியோடு இருப்பேன். உண்மையில் இப்போது பெருமகிழ்ச்சியோடு இருக்கிறேன். எனக்கு ஒரு குறையும் இல்லை.

மன்னி :

சரி, நேரமாகிறது. உள்ளே போவோம். சீசரின் தூதர்களுக்கு அனைத்துச் சிறப்புகளும் செய்யவேண்டும் அல்லவா? இரண்டாவது வீரன் :

மன்னரின் முகத்திலே கவலைக்குறி தோன்றுகிறது, அன்றோ?

முதல் வீரன் :

ஆம். உண்மைதான்

மன்னன் :

சலோம், சலோம், கொஞ்சநேரம் நடனமாட மாட்டாயா? உன்னைக் கெஞ்சுகிறேன். இன்றிரவு எனக்குக் கவலையாக இருக் கிறது. நான் இங்கே வந்தபோது குருதியிலே கால் வழுக்கிவிட்