பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 சலோம்

டது. அது ஒரு தீக் குறி. அது ஒருபுறமிருக்க, வானத்திலே கருமை யான சிறகு ஒலி என் காதில் விழுந்தது. அதற்கு என்ன பொருள் என்று எனக்குத் தெரியவில்லை....இன்றிரவு எனக்கு மிகவும் கவ லையாக இருக்கிறது. ஆகையால், சற்றுநேரம் நடனமாட மாட்டாயா? சலோம், நீ கேட்டதைக் கொடுக்கிறேன். ஆள் நிலத்தில் பாதியை வேண்டுமானாலும் கொடுக்கிறேன். கொஞ்ச நேரம் நடன மாடமாட்டாயா?

சலோம் :

(எழுந்து) நான் கேட்பதைக் கொடுப்பீர்களா? உண்மை

цитЗ;оum?

மன்னி :

சலோம், வேண்டா, நடனமாடாதே.

மன்னன் :

எது வேண்டுமானாலும் கொடுக்கிறேன். மாநிலத்தில் பாதி வேண்டுமானாலும் தருகிறேன்.

சலோம் :

உண்மையாகவா, அரசே2

மன்னன் :

மெய்யாக, சலோம்.

மன்னி :

சலோம் வேண்டா, நடனமாடாதே.

சலோம் :

ஆணையிட்டுச் சொல்லுங்கள்.

மன்னன் :

எனது உயிர்மேலும், செங்கோல்மேலும், தேவதை களின்மேலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். நீ விரும்புவதைத்