பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 சலோம்

அதனால் வாழ்க்கை கடுமையாகிறது. குருதிக் கறைகள் செம்மலர் இதழ்களைப்போல சிவப்பாக இருக்கின்றன என்று சொல்லு வதே சரி... சரி, அதைப்பற்றி எல்லாம் இப்போது ஏன் பேச வேண்டும்?... இப்போது நான் இன்பமாக இருக்கிறேன், இன்ப மாக இருப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. இல்லைவா? உன் மகள் இப்போது நடனமாடப் போகிறாள். சலோம், நீ நடன மாடுவாய் அல்லவா?

மன்னி :

சலோம், வேண்டா, நான் சொல்வதைக் கேள்.

சலோம் :

அரசே, நடனமாடுகிறேன்.

மன்னன் :

உன் மகள் சொல்லுவதைக் கேட்டாயா? அவள் இப்போது நடனமாடப் போகிறாள். சலோம், நீ நடனமாடப் போவதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சி. நடனமாடியதன் பின் உனக்கு வேண்டி யதைக் கேள். மறந்துவிடாதே. பாதி ஆள்நிலமானாலும் சரி, வாக்குக்கொடுத்திருக்கிறேன். அல்லவா?

சலோம் :

ஆம் வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள்.

மன்னன் :

சொன்ன சொல்லிலிருந்து நான் தவறியது இல்லை. உண்மையிலிருந்து விலகியதில்லை நான், பொய் சொல்ல எனக்குத் தெரியாது. நான் சொன்ன சொல்லுக்கு அடிமை, அதிலும் நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் ஒரு மன்ன வனின் சொல். காப்படோசியா அரசன்தான் பொய்சொல்லுவது வழக்கம். அவன் முறையான அரசன் அல்லன். அவன் ஒரு கோழை, எனக்கு அவன் எராளமாகக் கடன் தரவேண்டும். ஆனால், அவன் எங்கே கொடுக்கப்போகிறான்? அவன் என் தூதர்