பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 சலோம்

மன்னி :

ஆம், மெய்தான் விண்மீன்கள் பழுத்த கனிகளைப்போலப்

பொல பொலவென்று கீழே உதிர்கின்றன. செங்கதிர் இருள் மயமாகி வருகிறது. நானில மன்னர்கள் அஞ்சுகின்றனர். உள்ளே போவோம், நீங்கள் உடல் நலமற்றிருக்கிறீர்கள், உங்களுக்கு மனக் கோளாறு என்று அவர்கள் உரோமாபுரியிலே சொல்லப் போகிறார்கள், வாருங்கள், உள்ளே போவோம்....

அறிவனுடைய குரல் :

ஏடாமிலிருந்து வந்திருக்கும் இவன் யார் செந்நீல உடை அணிந்திருக்கும் இவன் யார்? பீடுடைய நடை நடந்து செல்லும் இவன் யார்? உனது உடை ஏன் சிவந்திருக்கிறது.?

மன்னி :

நாம் உள்ளே போவோம், அவனுடைய குரலைக் கேட்டு எனக்கு வெறி உண்டாகிறது. அவன் ஓயாமல் கத்திக்கொண்டி ருக்கும் வரையில், என் மகள் நடனமாட விடமாட்டேன். நீங்கள் எப்போதும் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்வரை, அவளை நடனமாட விடமாட்டேன். சுருங்கக் கூறினால், அவளை நடன மாடவே விடமாட்டேன்.

மன்னன் :

வேண்டா, எழுந்திருக்கவேண்டா. எரோதியா, என் அன்பே, அதனால் என்ன பயன்? சலோம் நடனமாடாமல் நான் உள்ளே போகமாட்டேன். சலோம் நடனமாடுகிறாயா?

மன்னி :

வேண்டா சலோம், வேண்டா.

சலோம் :

இதோ ஆடப் போகிறேன் (நடனமாடுகிறாள்).