பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 சலோம்

மன்னன் :

ஆம், தெய்வங்களறிய உறுதி செய்தேன், ஆனால் சலோம், உன்னைக் கெஞ்சுகிறேன்; வேறு எதையாவது கேள். நாட்டில் பாதி வேண்டுமானாலும் கொடுக்கிறேன், ஆனால் இது வேண்டா.

சலோம் :

அறிவன் சோகனுடைய தலையே வேண்டும்.

மன்னன் :

வேண்டா, அது எனக்குப் பிடிக்கவில்லை. சலோம்:

உறுதி செய்துவிட்டீர்கள் அரசே!

மன்னி : -

ஆம், உறுதி செய்துவிட்டீர்கள், எல்லோருக்கும் அது தெரியும்.

மன்னன் :

பேசாதே! நான் உன்னுடன் பேசவில்லை.

நல்ல பரிசைக் கேட்டிருக்கிறாள் என் மகள். அறிவன் சோக னானின் தலை! அவன் என்மேல் பழிச் சொல் மாரி பொழிந்தான், என் மகள் என்னை விரும்புகிறாள். சலோம், விட்டுக் கொடாதே! அவர் உறுதி செய்திருக்கிறார்.

மன்னன் :

பேசாமலிரு, நான் உன்னிடம் பேசவில்லை.... சலோம், அமைதியாக ஆழ்ந்து எண்ணிப்பார். நான் ஒருபோதும் உன்னிடம் கடுமையாக இருந்ததில்லை. எப்போதும் உன்மேல் எனக்கு அன்பு அதிகம்... ஒருவேளை மிக அதிகமாகவே உன்னை விரும்பியிருக்கலாம். இதை மட்டும் கேட்காதே சோகனானின் தலைவேண்டுமென்று கேட்பது அஞ்சத்தக்க ஒன்று. நீ எள்ளல் செய்கிறாயென்று கருதுகிறேன். வெட்டிய தலை பார்ப்பதற்குப்