பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 சலோம்

வரும் நண்பர்கள் வா. இங்கு வா!....என்ன சொல்லுகிறேன்... நினைவு இருக்கிறது. சலோம், அருகே வா, நான் சொல்வதைக் கேட்கிறாயோ என்னவோ? ...எனது வெண்மயில்களைப் பார்த்தி ருக்கிறாய் அல்லவா? அழகிய வெண்மயில்கள் சைப்ரசு மரங்க ளுக்கிடையே களித்து உலவித் திரிகின்றன. அவற்றின் அலகுகள் மொன்மயமாக விளங்குகின்றன. அவை உண்ணும் தானியங் களும் பொன்மயமானவை, அவற்றின் பாதங்கள் சிவப்பு நிறமா னவை, அவை வாயைத் திறந்து அகவும்போது, மழை பொழிகிறது. தோகையை விரித்து ஆடும்போது வானிலே திங்கள் உதயமாகிறது. இரண்டிரண்டாக, அவை மரங்களிடையே உலவு கின்றன. ஒவ்வொரு மயிலையும் காப்பதற்கு ஒரு வேலைக்காரன் இருக்கிறான். சிற்சில சமயம், மேலே கொஞ்ச உயரம் பறந்து விட்டு பசுந்தரையில் உட்காரும். அதைப்போல, அழகிய பற வைகள் உலகிலேயே கிடையா. அதைப்போல அழகிய பறவைகள் வைத்திருக்கும் மன்னர்களும் உலகில் இல்லை. சீசரி டம்கூட இத்தகைய மயில்கள் இல்லை. ஐம்பது மயில்கள் கொடுக்கிறேன்-உனக்கு. நீ போகும் இடமெல்லாம் உன் பின்னா லேயே தொடரும், அங்கு நாற்புறமும் மயில்கள் குழ நீ நடந்து சென்றால் முகில்களுக்கிடையில், வெண்மதியம் ஊர்ந்து செல்லு வது போல இருக்கும்....எல்லாவற்றையும் உனக்கக் கொடுக் கிறேன். நூறு மயில்கள் என்னிடம் இருக்கின்றன. அவை அனைத்தும் உனக்கே, வாக்குறுதிலிருந்து என்னைக் காப்பாற்று. (மதுவை அருந்துகிறான்)

சலோம் :

அறிவனுடைய தலையே வேண்டும்.

அப்படிக் கேள். மகிழ்ச்சி!

மன்னன் :

ஏய்... பேசாமலிரு, எப்பொழுதும் ஏன் கத்துகிறாய்? இரை கண்ட விலங்குபோல ஏன் இரைக்கிறாய்? உனது குரல் எனக்கு