பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சலோம்

செய்திருக்கிறார். சிற்றின்பத்தால் சீரழிவதைவிட, பேரின்பத்தால் பேருண்மைகளை அறிய முயல்வது சாலச் சிறந்தது என்பதை ஒயில்ட்டு மிக ஆழமாக வற்புறுத்துகிறார். ஒவ்வொரு தமிழனும் வாங்கிப் படிக்க வேண்டிய அரிய நூல், ஆஸ்கார் ஒயில்டின் 'சிறை அனுபவம்'.

ஆங்கில வசனத்தை இவ்வளவு கூர்மையாக, இவ்வளவு லாகவமாக வேறு யாராலும் கையாள முடியாது. பெர்னார்ட்ஷா" வின் வசனம் கூட இவ்வளவு கூர்மையாக, இலக்கிய ஜிலுஜிலுப் போடு அமையவில்லை. தந்தத் தகட்டில் சித்திரம் எழுதுவ துபோல், ஒயில்ட்டு பாஷையைக் கையாளுகிறார்: சிந்தனைச் சித்திரமாகவே சிங்காரமாக சிறப்போடு நேரே நின்று பேசுகிறது. அகராதியில் உள்ள எளிய சொற்கள் எல்லாம், ஆஸ்கார் ஒயில்டின் கைவண்ணத்தால், உயிரோவியமாகவே மாறிவிடுகின்றன.

சிறை அனுபவம் (De Profunds) என்ற நூலில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் :

'கலையின் மர்மம், வாழ்வின் மர்மம், இயற்கையின் மர்மம்', இவைகளையே நான் தேடி அலைகிறேன்.

'சந்தோஷம், சிரிப்பு இவற்றினுள் கொடிய மனநிலைகள் பதுங்கி வளரலாம்; ஆனால் துக்கத்தினுள் துக்கம்தான் வளரும். சுகம், இன்பம், மூடித் திரையிட்டிருக்கலாம்; ஆனால் துன்பத் திற்குத் திரையில்லை, முகமூடியில்லை. கலையின் உண்மை வெளித் தோற்றத்தில் அவசரமாய் நிகழ்வதல்ல; ரூபத்தின் சாயை போன்ற நிழலல்ல; கல்லில் உறையும் தோற்றமல்ல; ஒரு மலைக் குகையினின்று வருகின்ற எதிரொலியல்ல; சந்திரனைச் சந்திர னுக்குப் பிரதிபலிக்கும் வெள்ளிக் கிணறுமல்ல, பூவைப் பூவுக்குக் காட்டும் நீர் நிலையுமல்ல; ஆனால் தன்னுள் ஐக்கிய மடையும் நிலையே, கலையின் உண்மைநிலை. ஆத்ம நிலையமா கவே துன்ப உடல் மாறிவிடுகிறது; கலையே குணத்தின் வசீகர