பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 68

அயர்ச்சியை உண்டாக்குகிறது... சலோம். நீ என்ன கேட்கிறாய் என்பதை எண்ணிப்பார். இவன் கடவுளிடமிருந்து தோன்றி யவன், தூயவன், தெய்வத்தன்மை வாய்ந்தவன். அவனுடைய வாயிலிருந்து கொடிய சொற்கள் வெளியாகின்றன. பாலை வனத்தில் கடவுள் அவனுக்கு துணையிருந்ததைப்போல அரண் மனையிலும் அவனுக்குத் துணையாய் இருக்கிறார். கடவுள் அவ னுக்கு ஒத்தாசையாக இருக்கிறார். மேலும், அவன் இறந்தால், எனக்கு ஏதாவது துயரக்கேடு உண்டாகலாம்... இங்கு வந்த போதே, அரத்தத்தில் என் கால் வழுக்கிவிட்டது. சற்று நேரத்திற்கு முன்னால் வானத்திலே சிறகு ஒலி கேட்டது. இதெல்லாம் தீக் குறிகள் சலோம். எனக்கு ஏதாவது தீங்கே நேருவது நல்லதா உனக்கு?... நான் சொல்லுவதைக் கேள்.

சலோம் :

அறிவனின் தலையே வேண்டும்.

மன்னன் :

ஐயோ, நான் சொல்லுவதை நீ கவனிக்கவில்லையே! இங்கே பல அணிகலன்களை ஒளித்து வைத்திருக்கிறேன். உன் அன்னைகூட அதைப் பார்த்ததில்லை. அவை வெகு கிடைதற்கரி யவை, நான்கு வட முத்து ஆரம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அவை வெள்ளிக் கதிர்களிலே பதிந்திருக்கும் முழுமதிகளைப் போல இருக்கும். அவை, பொன் வலையிலே வீழ்ந்த ஐம்பது வெண்மதியங்கள் போன்றவை. அதை ஒர் அரசி அணிந்திருந்தாள். நீ அதை மார்பில் அணிந்து கொண்டால் பேரரசி போல் விளங் குவாய். என்னிடம் இரண்டு வகையான சிவந்த நீலக் கற்கள் இருக்கின்றன. ஒன்று கொடி முந்திரிச்சாற்றைப் போல் இருண்டி ருக்கிறது; நீர் கலந்து நிறப்பொலிவு பெற்ற மதுவைப்போல சிவந்திருக்கிறது மற்றொன்று. புலிக் கண்கள் போன்று இள மஞ்சள் நிறத்தில் சில கற்களும், காட்டுப் புறாவின் கண் களைப் போன்று வெண் சிவப்பில் சில கற்களும், பூனையின் கண்களைப் போல இளப் பச்சை நிறத்தில் சில கற்களும் இருக்கின்றன.