பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 70

பொருள்கள். இதற்குமேல் என்னதான் வேண்டும். உனக்குத் தரு கிறேன். உனக்கு வேண்டியதைக் கேள். கொடுக்கிறேன். ஒரே ஒரு பொருளை மட்டும் கேட்காதே. ஓர் உயிரைமட்டும் காப்பாற்று.

யூதர்கள் :

ஓ!

சலோம் :

அறிவனின் தலையே வேண்டும்.

மன்னன் :

(சாய்ந்தவாறு) அவள் கேட்பதைக் கொடுத்துத் தொலை யுங்கள், தாயைப்போல்தானே இருப்பாள் மகளும். (முதல் வீரன் வருகிறான். அரசன் சாத் தண்டனைச் சின்னமாகிய கணையா ழியை அவனிடம் கொடுக்கிறான். வீரன் ஆழியைக் கொலை ஞனிடம் கொடுக்கிறான். கொலைஞனுக்கு அச்சமுண்டாகிறது) ஐயோ, ஏதோ ஒரு தீங்கு நிகழப்போகிறது இன்று. ஆ நான் ஏன் உறுதி செய்தேன்......

மன்னி :

போற்றும் செயல் செய்தான். என் மகள்.

மன்னன் :

இன்று ஏதாவது, முரண்பாடு நிகழப்போகிறது என்பதில் ஐயமில்லை.

சலோம் :

(கவனித்தவாறு) ஒர் அரவமும் இல்லை, எங்கும் அமைதி. இந்த மனிதன் அலறவில்லை, என்னை யாராவது கொல்ல வந்தால், நான் ஒலம் இடுவேன், சண்டை போடுவேன்... வெட்டு. நாமன்..... வெட்டு.... அமைதி, அஞ்சத்தக்க அமைதி. ஆ. நிலத்தில் ஏதோ விழும் ஓசை கேட்கிறது. அது கொலை ஞனின் வாள்படை. அவன் கோழை, ஆண்மை இல்லாதவன்.