பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

சலோம்

முற்றுணர்ந்தோனைக் கொல்ல அவன் அஞ்சுகிறான், படைஞர் களை அனுப்புவோம். (மன்னியின் பணியாளைப் பார்த்து) இங்கே வா, நீ சிரியா இளைஞனின் நண்பன் அல்லவா? சரி, போ. படைஞர்களிடம் சொல்லி, மன்னவன் வாக்களித்த பொருளைக் கொண்டுவரச் சொல் (பணியாள் பின் வாங்கு கிறான், அவன் படைஞர்களிடம் சொல்லுகிறான்) ஏ, படைஞர் களே அறிவனின் தலையைக் கொய்து வர்ருங்கள். (படைஞர்கள் பின் வாங்குகின்றனர்) அரசே, படைஞர்களுக்கு ஆணை யிடுங்கள். (கொலைஞன் வெள்ளித் தட்டிலே அறிவன் சோக னானின் தலையைக் கொண்டு வருகிறான். சலோம் ஆவலுடன் அதைப் பற்றிக் கொள்ளுகிறாள். எரோத்து மன்னன் முகத்தை மூடிக் கொள்ளுகிறான். மன்னி சிரிக்கிறாள். நாசரேயர்கள் மண்டி யிட்டுத் தொழுகை செய்கின்றனர்).

சலோம் :

ஆ உனது சிவந்த இதழை முத்தமிட விரும்பினேன். நீ ஒப்புதல் தரவில்லை. இப்பொழுது என்ன செய்வாய்? முத்த மிடப் போகிறேன். நன்றாய்ப் பழுத்த கனியை ஆவலுடன் கடித்துத் தின்பதுபோல, உனது இதழ்களை பல்லால் க்டிப்பேன். ஆம், சோகனான்... இதோ முத்தமிடப் போகிறேன். ...ஆனால் சோகனான், கண் திறந்து என்னை ஏன் பார்க்கவில்ல்ை? சீற்றமும் புறக்கணிப்பும் மிகுந்து பார்ப்பதற்குப் அஞ்சத்தக்கதாக இருந்த உனது கண்கள் இப்பொழுது ஏன் மூடியிருக்கின்றன? காரணம் என்ன? விழிகளைத் திற சோகனான் என்னைப் பார்க்க ஏன் மறுக் கிறாய்? என்னைக் காண அஞ்சுகிறாயா? சிவந்த நாகப்பாம்பு போல நஞ்சை உமிழ்ந்துகொண்டிருந்த உனது நாக்கு ஏன் தூங்குகிறது? வியப்பாக இல்லையா. இது? அந்த வீரியன் பாம்பு, அசைவற்று இருப்பதற்குக் காரணம் என்ன?... நீ என்னை வெறுத்துத் தள்ளியாய். என்னைப் பழித்தாய். நான் யூதேயா நாட்டின் இளவரசி. மன்னி எரோதியாசின் மகள். என்னை விலை மாதினும் இழிவாகக் கருதினாய். நீ. ஆனால் சோகனான், நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். நீயோ, இறந்துபோனாய். உன்