பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 72

தலை என் கையில் இருக்கிறது. இப்போது என் மனத்திற்கு உகந்தவாறு அதைப் பயன்படுத்தலாம். வானத்திலே பறக்கும் பறவைகளுக்கோ, தெருவில் போகும் நாய்களுக்கோ, அதை எறி யலாம் நான். நாய்கள் உண்டு மீந்ததைப் பறவைகள் உண்ணும். ஆ, சோகனான், நான் உன்னை மனமாரக் காதலித்தேன். மற்றவர் களைத் காணக்காண எனக்கு வெறுப்பு அதிகமாகிறது, நீ அழகன், எழிலாண்மையன். வெள்ளிக் குன்றின்மீது நிற்கும், தந்தத் தூண் போன்றது உன் உடல், அல்லி-மலர்களும் குயில்களும் நிறைந்தி, ருக்கும் பூங்கா போன்றது அது. எழில் ஒளி நிறைந்த உனது உடலுக்கு இணையான பொருள் எதுவும் உலகில் இல்லை. உனது செறிந்து நெளிந்த தலைமுடி போன்ற கரும்பொருள் வேறு ஏதா வது உலகில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. சிவந்த உனது இதழ்களும் அவ்வாறே மின்னுகின்றன. அஃஆ, என்னை ஏன் பார்க்கவில்லை, சோகனான்! விண்ணகத்திலுள்ள தந்தையை நீ பார்த்திருக்கிறாய். ஆனால், என்னைப் பார்க்கவில்லை-ஒரு முறைகூட, ஒருமுறை பார்த் திருந்தாலுங்கூட, என்மீது மையலுற் றிருப்பாய், ஐயோ! உன்மேல் எனக்கு எவ்வளவு காதல். இன்னும் உன்னைக் காதலிக்கிறேன். சோகனான்-உன்னையே, உன்னை மட்டுமே காதலிக்கிறேன். வேட்கை மிகுந்தேன், உனது அழகைப் பருகத் தவிக்கிறேன். பசி மிகுந்தேன், உனது மெய்யை உண்ணத் துடிக்கிறேன். கணிகளோ, மதுவோ எனது வேட்கையையும் பசி யையும் தணியா. நான் இப்போது என்ன செய்வது, கரைபுரண்டு வரும் வெள்ளமோ, கண்ணுக்கு எட்டின தொலைவு வரையில் நீர் படர்ந்திருக்கும் போராழியோ எனது ஆவலைத் தீர்க்காது. நான் ஒர் அரசகுமாரியாக இருந்தும், நீ என்னை உதறித் தள்ளினாய், நான் ஒரு கன்னிப் பெண், நீ எனது கற்பை எடுத்துக் கொண்டு மறைந்தாய்.... ஆ. சோகனான், என்னைக் கண் திறந்து பாரேன், நீ ஒரு முறை பார்த்திருந்தால் என்னைக் காதலித்திருப்பாய்.

மன்னன் :

உனது மகள் கொடியவளினும் கொடியவள்; அவள் செய்தது பெருங்குற்றம்.