பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 76

திலே, பாஷை மிகமிக உயரமாகவே உலகளாவி வளர்ந்து விட்டது. அவர்களுடைய ஆழ்ந்த சிந்தனைகள் நிகரற்ற சிந்த னைகள்; அவர்களுடைய சொற்கள், நிகரற்ற சொற்கள்.

女 女 女

ஒவ்வொருவனும் தனிப்பட்ட முறையிலே சிந்திக்க வேண்டும். ஒருவனையொருவன் காப்பியடித்துக் கொண்டு வாழ்வதில் என்ன பிரயோஜனம். தானே தன் வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்து முன்னேறினால் வாழ்க்கையின் ஆழ்ந்த அகண்ட பொருள் புரியும். காப்பியடித்துக் கதறுவதில், எவ்விதப் பயனு மில்லையே? நெஞ்சில் குத்திக்கொண்டு பாராமல் படித்து, புரி யாமல் ஒப்புவிப்பதில் எவ்வித மன வளர்ச்சியும் கிடையாது? புதிய நூல்களைப் புதிய முறையிலே, தன் மனவளர்ச்சியை ஒட்டிச் சிருஷ்டிக்க முன்வரவேண்டும். அப்போதுதான், கலை யும், கவிதையும், வாழ்க்கையும், இலட்சிய உறுதியும் முன்னேற் றமடையும். மனிதனை மனிதன் எதிரொலித்துக் கொண்டு வாழ்வதும், சிந்திப்பதும், மதியினம். படித்த முட்டாள்களைவிட, படியாத அறிவிலிகளின் நெஞ்சிலே சில உண்மைகளை ஆழமாக விதைக்க இடமிருக்கிறது.

女 女 女

மனிதனுக்கு வாழ்க்கையிலே வருகின்ற சோதனைகள் எல்லாம் சிறந்த உண்மைகளையே போதிக்கின்றன. துன்பமே துப்பாக்கியாக வெடித்தாலும், அதிலிருந்து சிதறி வருகின்ற வெடிப்புகையிலே, தியாகத்தின் ஒளி மின்னலிடுகிறது. கண்ணிர்க் கவிதையிலே உலகம் உண்மையை உமிழ்கிறது. துன்பத் தீயிலே, ஒருவன் தியாக மூர்த்தியாக ஒளிவீசுகிறான்.

  1. or or

குழந்தையின் உடல், இறைவனின் உடல்; கவலையை மாற்றும் அகண்ட சக்தி குழந்தையின் மழலைக்கே உண்டு;