பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 78

நின்று பார்த்தால், விதியின் விபரீத ஆழம் தெரியும். விதியின்

பற்கள் கூர்மையானவை.

女 女 女

கடலைக் கண்டால், கலங்கிய மனம் உடனே தெளியும்; கடலின் அகண்ட தோற்றத்திலே, மனவேதனை மாறுகிறது; உள்ளத்திலே சாந்தி நிலவ ஆரம்பிக்கிறது. சகல நோய்களும், கடல் காற்றிலே, பறந்தோடுகின்றன. அலையின் கர்ஜனையிலே, பாஷையின் மர்மம் தெரிகிறது. அலைப் புரட்சியிலே, விதியின் அகண்ட லீலைகள் விளையாடுகின்றன.

女 女 女

இயற்கையோடு வாழவே நான் ஆசைப்படுகிறேன். இயற் கையே, என் இதயப் புண்ணை மாற்றும் மாமருந்தாகக் காட்சி யளிக்கிறது. ஒரு சின்னஞ்சிறு பூ மொட்டில், வசந்தம் ஒளிந்து விளையாடும்; பூவின் வாயிலுள்ள வர்ணமும், சிப்பியில் தோன்றி வளரும் ரேகை எழிலும் என் இதயத்தைக் கொள்ளை கொள்கின்ற னவே; ரோஜா இதழில், கண்ணிர்த்துளிகள் என்பால் கருணை கொண்டு, வழிந்தோடுகின்றனவே.

女 女 女