பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 சலோம்

ஒயில்டின் கட்டுரைகளும் இலக்கிய விமர்சனமும் புது முறையிலே அமைந்திருக்கின்றன. மிக நுட்பமான கருத்துகள், அருமையான நிகரற்ற நடையிலே பவனி வருகின்றன. கற்பனையின் எழிலும் ஆவேசமும் அந்தரங்கமும் புதிய பாணி யிலே, சிருஷ்டி எழிலோடு புரண்டோடுகின்றன. கூரியசொற்கள்! கலைக் கூர்மையோடு கவர்ந்திடுகின்றன, ஆம்!

'பெண் உலகம்' பத்திரிகைக்கு நீண்ட நாள் ஆசிரியராக இருந்து, பெண்களைப் பற்றிப் பிரமாதமான ஆராய்ச்சிகள் செய்தி ருக்கிறார். அவருடைய எழுத்தெல்லாம் வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் ஆழ்ந்த உண்மைகளை விளக்கும் ஆற்ற லோடும் அமைந்திருக்கின்றன.

ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலே ஆழ்ந்து சிந்திக்க வேண்டுமென்றும், சிந்தனையிலும், நடையிலும் சிருஷ்டி எழில் வளர வேண்டும் என்றும், யாரும் பிறருடைய கருத்துகளைத் திருடி வழங்கக் கூடாது என்றும் ஒயில்ட்டு வற்புறுத்துகிறார். ஈ அடித்தான் காப்பிக்கு நேர் விரோதி ஆஸ்கார் ஒயில்ட்டு. காப்பியடிப்பதே கலையின் வளர்ச்சிக்கு விரோத மென்றும், பாராமல் படித்து வாந்தி எடுப்பது கலையல்ல என்றும், அருமையாக போராடுவார் நமது கலைச் சிற்பி ஆஸ்கார் ஒயில்ட்டு.

"The Critic as Artist" என்ற ஆராய்ச்சிக் கட்டுரை மிக அருமையான கட்டுரை: சிறந்த இலக்கிய விமர்ச்சனம்.

கலையைப் பற்றி ஆஸ்கார் ஒயில்ட்டு என்ன சொல்லு கிறார்? கலைஞன் உள்ளத்தினின்று உதயமாவதே கலை. இயற் கையையும் வெளி நிகழ்ச்சிகளையும், பார்த்துக் காப்பியடிப்பது கலையல்ல! கவிதையும், கவிஞன் உள்ளத்தினின்று பீறிட்டுக் கொண்டு வெளிவரும் அற்புத சிருஷ்டியாகும்; கற்பனை உல கிலே சஞ்சாரம் செய்யும் கலைஞனும், கவிஞனும் பித்துப் பிடித்