பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24 கோஸ்பூ-(Cauliflower) நல்ல பலம் தரும் உணவாம். இதைப் பச்சையாகப் புசித்தல் கலம். சமைத்தால் இதிலுள்ள உயிர் சத்துகள் குறைந்து போகின்றன. நீரிழிவுக்கு நல்லது - இதில் உயிர்சத்துக்கள் (ஏ) (பி) (சி) இருக்கின்றன, இதில் கால்சியம், பாஸ்ப்ரஸ் கலந்த உப்புகள் இருக்கின்றன. கோஸ்முட்டை-அல்லது கோஸ்கீரை (Cabbage) கல் லுணவாம். இதில் (ஏ) (பி) (பி. 2) (சி) உயிர் சத்துக் கள் உள. நீர் இழிவை குணப்படுத்தும். நீரிழிவுக் காரர்களுக்கு இன்சுலின் (Insulin) எனும் மருந்தைப் போல், இரத்தத்திலுள்ள சர்க்கரையைக் குறைக்கும். ஜீரணகாலம் 3 மணி முதல் நாலுமணிக்குள்ளாக; இதைப் பச்சையாகப் புசித்தல் நலம். வேகவைத்தால் இதிலுள்ள வுயிர்சத்துகள் குறைந்து போகின்றன. இதில் அயோடின் இருக்கிறது. சதுரக்கள்ளி-கரப்பான், நமைச்சல் இவைகளை குணப் படுத்தும். சந்தனம்-குளிர்ச்சி பதார்த்தம் - உட்சூடு, நமைச்சல், இவைகளை நீக்கும் - பிரமேகத்திற்கு நல்லது ஜீான சக்தியை அதிகரிக்கும். மேலே பூசவும். சபோடாபழம்-கல் உணவாம். மலத்தைக் கள்ளும் இதில் (ஏ) உயிர் சத்து நிரம்ப இருக்கிறது. சர்க்கரை-(பொதுகுணம்) 1 அவன் சு சர்க்கரையில் 100 காலெரி சக்தி உண்டு - நீர்வியாதிக்காரர்களுக்கு இது ஆகவே ஆகாது. மற்றவர்கள் இதை மிதமாய்ப் புசிக்கல் நலம் - வயோதியர்கள் இதை எவ்வளவு குறைக்கமுடியுமோ அவ்வளவு குறைக் கல் நல்லது - வெள்ளை சர்க்கரையைவிட பழுப்புச் சர்க்கரை உடம்பிற்கு மேலானது. சர்க்கரைவர்த்திக் கீரை-இதை சக்ரவர்த்திக் கீரை என்று சாதாரணமாக வழங்குகிருரர்கள் - இது வாத ரோகத்தைத் தணிக்கும்.