பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

2? சுக்கன் காய்-(இதுவே சுக்காங்காய் எனப்படும்) இதன் வற்றல் வாதநோயை குணப்படுத்தும். சுக்காங் கிரை-ஈரலுக்கு வலுவைத் தரும் - பசியைத் தாண்டும்-வாய்வு பித்தம் இவைகளைக் கண்டிக்கும்ாக்கபேதியை நிறுத்தும்; ஜீரணத்தை அதிகரிக்கும். சுக்கு-அஜீரணம், மார்பு எரிச்சல், புளியேப்பம், சுவாச நோய், குன்மம், ஜலதோஷம், வயிற்றுவலி, சீதபேதி இவைகளே குணப்படுத்தும்-பசியை விர்த்திசெய்யும், உஷ்ணகாரி-வாய்வு, உடல்வலி இவைகளைக் குறைக் கும். சுக்கை வாயில் வைத்து சுவைத்தால் பல்வலி குறையும்; சுக்கைமென்று, அதன் நீரை மர்த்திரம் உட்கொண்ட்ால் தொண்டைக் கம்மல் நீங்கும். சுண்டைக்காய்-மார்பு சளி, கிருமி ரோகம், வாகாதிக் கும் இவைகளே நீக்கும்-பித்த சாந்தியாம், கபத்தை நீக்கும்-ஆசனத்துவார சீகக் கட்டு நீங்கும். தீபன த்தை விர்த்திசெய்யும் -- இதில் அயம் இருப்பதால் உடம்பிற்கு நல்லது-சுண்டைக்காய் வற்றலில் அதிக அயம் இருப்பதாக, ஆங்கில வைத்தியர்களும் ஒப்புக் கொள்ளுகின்றனர். இதை குழம்பிலிட்டு சாப்பிட {3}}ff {f}, சுரைக்காய்-அவ்வளவு நல்ல பதார்த்தம் அல்ல-வாத பிக்கமாம்-மார்பு நோயுண்டாக்கும். ஆனல் உட் சூடு நீங்கும்-மலம் இளகும், நீரைப் பெருக்கும், நீர் வியாதிக்காரர்களுககு நல்லதல்ல, குளிர்ச்சி பதார்த் தம்-சூட்டு இருமலைத் தணிக்கும். செம்பரத்தை-குளிர்ச்சி பதார்த்தம் - பெரும்பாட்டை நீக்கும்-மலத்தை இளகச் செய்யும்-செம்பரத்தைப் பூவின் சாறு தலைமயிரைக் கறுத்து செழுமையாக வளாச் செய்யும். சேமைக் கிழங்கு-அல்லது சேப்பங் கிழங்கு-வாய்வை விர்க்கி செய்யும்-கோழையை அதிகப்படுக் தும் கல்ல மருந்தின் குணத்தை மாற்றும்-பத்தியத்திற்கு உத வாது-மிதமாய்ப் புசிக்கலாம்.