பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28 சோம்பு-வயிற்றுவலி, அஜீரணம், இருமல், சுவாசநோய் இவைகளே குணப்படுத்தும். சோளம்-நல்ல உணவல்ல-ரணங்கள், கரப்பான் இவை களே அதிகப்படுத்தும் - கருஞ்சோள அரிசி, மிகவும் நல்லதல்ல; கமைச்சலை அதிகரிக்கும். ஆல்ை, மக்காச் சோளம் கூடிய ரோகத்திற்கு நல்லதென்று யூனிை வைத்தியர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். இதில் (எ) (பி) உயிர்சத்துகள் உண்டு. சோயாப் பருப்பு-(Soya Beans) பலம் தரும் உணவு(எ) உயிர்சத்து கொஞ்சமுண்டு (பி) உயிர்சத்து அதிக முண்டு. இதில் கொழுப்பு அரைக்கால் முதல் கால் பங்கும், புரோடீன் கால்முதல் அரைப்பங்கும் இருக் கிறது. இதன் பால் பசும் பாலுக்கு முக்கால் பங்கு சமானமானது. இதில் இரும்பு இருக்கிறது. தக்காளி-உடல் தேற்றி, நீரைப் பெருக்கும்-மலத்தைப் போக்கும்--ரத்த சுத்திசெய்யும் (எ) உயிர் சத்துளது. அயோடினும் உளது - இதன் வற்றல் உடம்பிற்கு நல்லது, பாலர் முதல் வயோதிகர் வரை எல்லோரும் புசிக்கலாம். சீமைதக்காளிப் பழம்-மிகவும் நல்ல உணவாம் இதில் (ஏ) (பி) (சி) உயிர் சத்துகள் உள. கண் நோய் களைத் தடுக்கும். குளிர்ச்சி பதார்த்தம்-கல்வி பலம் கரும்-ாத்த சுத்தி செய்யும் - பித்த சாந்தி, நல்ல பழத்தை பச்சையாகப் புசிக்கல் மிகவும் நல்லது. பழத்தை பச்சையாகப் புசிக்கால் 2 மணிக்குள்ளாக ஜீரணமாகிவிடும். வேகவைத்துப் புசித்தால் 2 மணி பிடிக்கும். இதில் இரும்பு, செம்பு, கால்சியம், பாஸ் பரஸ் இருக்கிறது. இதில் உயிர்சத்து (எ) இருக் கிறது; (பி) (சி)யுமிருககிறது. தக்கோலம்-கல்லபலம் தரும் பொருள் - காது விர்த்தி யுண்டாக்கும். மலத்தைக் கட்டும்; அடிக்கடி மலம் போகும் வழக்கமுடையவர்கள் இதை தாம்பூலத் துடன் புசித்தால், அதைத் தடுக்கும்-பாண்டு ரோகத் திற்கு நல்லது.