பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
41

41 பக்தியத்திற்கு உதவாது - வாத நோயாளிகளுக்கு மாத்திரம் உதவும்-நீரைப் பெருக்கும்-இதை எண் ணெயில் காய்ச்சி காதில் சில துளிகளைவிட காது நோய் குணமாகும். உட்கொள்ள கோழையை அகற் ஆறும் - மலத்தை இளகச்செய்யும் - ஸ்திரீகளுக்கு ருது உண்டாக்கும். பேரிக்காய்-இதில் (பி) (சி) உயிர் சத்துகள் உண்டு. பேரீச்சம் பழம்-நல்ல பொருள் பித்தரோகத்தை நீக் கும் - நீரிழிவைக் குறைக்கும் மல பந்தத்தை நீக்கும் -இருதயத்திற்கு பலம் தரும்-குளிர்ச்சி பதார்த்தம் -யூனுனி வைத்தியர்கள் இதை மிகவும் போற்று கின்றனர். பொடுதலை-சீதபேதி, இருமல், வாதநோய், குலேநோங் இவைகளுக்கு கல்லது. பொன்னுங்காணிக் கீரை-நல்ல உணவாம் - கண்ணு க்கு மிகவும் நல்லது. தேகச் சூடு, மூல வியாதி இவை களைக் குறைக்கும் - குளிர்ச்சி பகார்த்தம் - உடல் தேற்றி, நெய்யுடன் கலந்து, சாப்பாட்டின் முதலில், இதைப் புசித்தல் நலம். மஞ்சள்-கறிமஞ்சள்-உஷ்ணகாரி - தலைவலி, வீக்கம், வண்டுக்கடி இவைகளுக்கு, மேலே மஞ்சள் அரைத் துப் பூசினல் குணமாகும். சாதத்துடன் சேர்த்து அரைத்து, கட்டிகளுக்குப் போட்டால் கட்டிகள் உடையும் - மஞ்சளை வேப்பிலையுடன் அரைத்து அம்மை கொப்புளங்களின் மீது மிருதுவாய்த் தடவி ல்ை அவைகள் சீக்கிரம் ஆறிவிடும். மஞ்சள் நீரில் தோய்த்த வெண்சீலையால் கண்ணுேய்க்காரர்கள் கண்களே அடிக்கடி துடைத்துக்கொண்டிருந்தால், கண் நோய் சாந்தப்படும். மட்டிப் பால்-அல்லது மட்டுப் பால் (பட்டு=வாசனை) இதன் புகை தலைவலியை அகற்றும். 11