பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

47 வாழைக்காய்-பித்த க்திற்கு நல்லது-இருமலைக் குறைக் கும், ரத்த சுத் தியாம், ஆல்ை கொஞ்சம் வாய்வை அதிகரிக்கும். வாழைத்தண்டு-பித்த சாந்தி, ைேர்ப் பெருக்கும், நீர் பையில் உள்ள சிறு கற்களே கரைத்து வெளிப் படுத்தும். வாழைப் பழம் - மொத்தத்தில் வாத நோயாளிகளுக்கு ஆகாது-போஜனத்துடன் புசித்தால் குற்றமில்லை. இவைகளின் பொது குணம் மலத்தை தாராளமாக இழியச் செய்வதாம். பொதுவாக இவைகளில் உயிர் சக்துகள் (ஏ) (பி) (கி) (இ) இருக்கின்றன. (ஏ) உயிர் சத்து அதிகமுண்டு. மலை வாழைப்பழம்-ால்லது. இதிலும் சிறு மலைப்பழம் மிகவும் நல்லது. பேயன் வாழைப்பழம் நல்லது-குளிர்ச்சியைத் தரும். உட் சூட்டை நீக்கும்-சிற்ருமணக் கெண்ணேயில் தோய்த் துக் கொடுத்தால் விரோசனமாகும். மொந்தன் வாழை அல்லது பொந்தன் வாழை கல்லதல்ல. பச்சை வாழைப்பழம் நல்லதல்ல - சீதளத்தை உண்டு பண்ணும். நீரிழிவு நேர்யாளிகட்கு வாழைப் பழமே ஆகாது, நீரைப் பெருக்கும் - 1 வாழைப் பழத்தை பச்சையாக உண்டால் அது சுமார் 65 காலெரி சக்தி கொடுக்கும். வாழைப் பிஞ்சு-ரத்தமூலம், அதி மூத்திரம், வயிற்று இாணம் இவைகளுக்கு நல்லது-பேதியை நிறுத்தும். வாழைப் பூ-ாத்த மூலம், பிரமேகம், இருமல், கை கால் எரிச்சல், இவைகளை நீக்கும்-சுக்கிலத்தை விர்த்தி செய்யும், வாழைப் பூவின் நடுவிலுள்ள வெண்கிற மமைந்த பாகம் சீதபேதியை நிறுத்தும். வில்வ வேர்-வி ஷ, க் க டி ைய குணப்படுத்துமென்பர். இளம் வில்வ இலை மேக வியாதியை குணப்படுத்தும்இதுவே பில்வம்.