பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


(Iք க வ ை у நான் வயித்தியனல்ல, இச்சிறு நூலும் வைத்திய நூலல்ல. பல வருடங்களாக, என் சொந்த உபயோகத்திற்காக, உணவு' பொருள்களின் குணங்களைக் குறித்து வந்தேன். இது மற்றவர் களுக்கும உபயோகமாகட்டும் என்று இதை அச்சிடலானேன. கமது தமிழ் காட்டிலுள்ள, நமது முன்னேர்கள், ஆயிரம் வருடங்களாக, அநேகம் சொல்ப வியாதிகளே நாம் உண்னும் காய்கறிப் பதார்த்தங்களக் கொண்டே, குணப்படுத்திக் கொண் உனர் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயமே மாமிச வகையைத் தவிர, காம் சாதாரணமாகப் புசிக்கும் பதார்த்தங்களின் குணங்களைப பற்றி, நமது ஆயுர்வேத நூல் களிலும், சித்த ஒளஷத நூல்களிலும், யூனுனி வைத்திய நூல் களிலும், ஆங்கில வைத்திய நூல்களிலும், கூறி யிருப்பதை, வேண்டிய அளவு தொகுத்து, நமது விட்டிலுள்ள பெண்டிரும் அறியக்கூடியபடி எழுதியுள்ளேன். எனஅ கண்பர்களாகிய சில வைத்தியர்களைக் கொண்டு இதைப் பரிசோதிக்கச் செய்த பிறகே இதை அசிசிடலானேன். தமிழ் வைத்திய முறைப்படி பதார்த்தங்கள் சூடு, குளிர்ச்சி, வாய்வு என்று மூன் ருக பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கில வைத்திய நூலின் படி காம உண்ணும் பதார்த்தங் களில்ை கமது தேகத்திற்கு எவ்வளவு சக்தி உண்டாகிறது என்று அளக்கும் விதத்திற்கு காலொரி (Calory) என்று பெயர். சாதாரணமாக 2500 காலொரி சக்தி, ஒரு தினத்திற்கு மைக்கு நாம் உண்ணும் உணவிலிருந்து வரவேண்டும் என்று ஆங்கில வைத்தியர்கள் கண்டு பிடித்திருக்கிரு.ர்கள். அன்றியும் சாதாரணமாக ஒரு மனிதனுக்கு வேண்டியது. 95 கிரேயன்ஸ் (Grains)-புரொடின் 85 33 கொழுப்பு 485 3 * கார்பொஹைட்ரேட்ஸ் மேலும் (ஏ, பி, சி, டி, இ) உயிர் சத்துக்கள் (Vitamans) நமது தேக ஆரோக்கியத்திற்கு அவசியமானவைகளாம். சைவ போஜனம் கொள்ளும் பலருக்கு இச்சிறு நூல் உப யோகப்படுமாறு இறைவன் அருளேப் பிரார்த்திக்கிறேன். ப. சம்பந்தம்.