பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதாரண உணவுப் பொருள்களின் கு ண ங் க ள் س سسسسسسسسسحسسييه هتعسسسسسسسـسـاسـ. அக்ரோட்-குளிர்ச்சி பதார்த்தம், இருதயத்திற்கு பலம் தரும்-உடலேத் தேற்றும். கொஞ்சம் கல்கண்டுடன் சேர்க் துப் புசித்தல் நலம். அகத்தி இலை-(1) குளிர்ச்சி பகார்த்தம்-பிக்க சாந்தி யாம்-மல மிளகி - உணவை செரிக்கச் செய்யும்வாய்வை உண்டுபண்ணு மென்பர். மருந்து சாப்பிடும் போது சாப்பிடலாகாது - தினந்தோறும் புசிக்க லாகாது. இதில் உயிர் சத்து (ஏ) இருக்கிறது. (2) செவ்வகத்தி - கபத்தை உண்டுபண்ணும் -நல்லதல்ல. (3) சீமை அகத்தி - இதன் இலையை நரம்பு நீக்கி பிசைந்து தேய்க்க, சொறி, சிரங்கு, காப்பான் குணமாகும். அத்திக்காய்-பிரமேகம், வாத கோய், சரீ ரச்சூடு, இவை களே நீக்கும், மலத்தைக் கழிக்கும், நல் உணவாம். அத்திப் பிஞ்சு பேதியை நிறுத்தும், ரத்த மூலக்கை நீக்கும். அத்திப் பழம் - சூட்டைத் தணிக்கும் - மலத்தைத் தள்ளும், ரக்க புஷ்டி யுண்டாம் - மது மேகத்திற்கு நல்லது-இதில் (பி) (சி) உயிர் சத்துகள் உண்டு. அதிமதுரம்-வாயில் ஒரு சிறு துண்டை அடக்கி வைத் திருந்தால் இருமலுக்கு நல்லது, கோழையை அகற் ஆறும்-விக்கல், காமாலை இவைகளே நீக்கும் - சூடு பகார்த்தம்-நீர்க் குண்டிக்காய்க்கும் (Kidneys) மண் ணிைாலுக்கும் (Liver) ஆகாது.