பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 
இழி தொழில்கள்
 

தண்டமிழ் நிலவிய பண்டைத் தமிழ் நாட்டில் வாழ்ந்தோர் இழிந்த தொழில் என்று கருதிய தொழில் ஒன்றே யொன்றுதான். அது மானம், அறிவு, முயற்சி அத்தனையும் விட்டுவிட்டு வெறும் குடலுக்கும் வாய்க்கும் அடிமைப்பட்டு, அறியாதவனிடமோ, அறிந்தவனிடமோ போய் "எனக் கொன்று ஈவாயாக" என்று இரப்பது. இதனை,

'ஈயென விரத்தல் இழிந்தன்றே!' (புறம்-204)

'ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே' (தொல்-எச்-சூ-49)


என்பவற்றால் அறியலாம்.

“தாமாகப் போய் இரப்பதுதானே இழிவு. அவராகவே கொடுப்பின், அதை ஏற்பது இழிவோ?" என்று வினவுவார் "அவ்வாறு ஏற்பது இழிவு மட்டுமன்று; தீமை பயப்பதும் ஆகும்" என்பது அவர் கொள்கை என்றறிக. இதனை,

'ஏற்பது இகழ்ச்சி" (ஒளவையார்-ஆத்திச்சூடி)
'கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்" (கம்ப-வேள்வி-29)
"நல்லா றெனினுங் கொளல் தீது" குறள்-222)

என்பவை விளக்கிக்காட்டும்.

இனி, இவற்றைவிட வேறெதுவும் இழிந்ததிலையோ வென்பார்க்கு, வேறொன்றும் உண்டு. அது அத்தகைய இழிவைக் கருதாமல் பிறர்பால் போய் ஒருவன், 'ஈயென்று கேட்டு 'ஈயேன்” என்று வைத்துக் கொண்டே மறைத்து விடுவதாகும். இதனை, -

'- -அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்றோ! -(புறம்:204)

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/23&oldid=1164379" இலிருந்து மீள்விக்கப்பட்டது