பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெற்றிருக்கும். அவர் யாவராயினும் ஆகுக. ஆனால் அக்குமுகாய அரிப்புப் புழுக்களால் தோற்றுவிக்கப் பெற்ற இச்சாதியெனும் வேண்டா அமைப்பு, அறிவியலும் மனவியலும் குமுகாய நலவியலும் தோன்றி வளர்ந்து கொண்டிருக்கும் இக் காலத்திலும் நமக்கு வேண்டுவதுதானா என்பதையும், அது வேண்டாக்கால் அதனைக் குழிதோண்டிப் புதைக்கும் வழிகள் எவை என்பதைப்பற்றியும் மட்டுமே நாம் இங்குச் சிறிது கூறுவோம்.

சாதி அமைப்பு ஒரு சில இயற்கை அமைப்புகளாலும், சில செயற்கைப் பாதுகாவலினாலும் மக்களோடு பின்னிப் பிணைந்து அவரைவிட்டு எவராலும் எக்காலத்தும் எம் முயற்சி கொண்டும் பிரிக்க முடியாததாகக் கட்டுண்டு கிடக்கின்றது. அவை ஏற்படக் காரணமாயிருந்த இயற்கை அமைப்புகள் இவை.

1. வழி வழியாக வந்த தொழில் முறைகள்.

2. அச்சமும், குருட்டுத்தனமும், புரட்டுகளும் வாய்ந்த சமய நம்பிக்கைகளும், அவற்றால் கிடைத்த போலிப் பெருமைகளும், தலைமை நிலைகளும்.

3. நிறவேறுபாடுகளும், பழக்க வழக்கங்களும், பொருளியல் ஏற்றத் தாழ்வுகளும்.

இவையன்றிக் கீழே காட்டப்பட்ட செயற்கைக் காரணங்களாலும் அச்சாதி நிலைப்புகள் வலிவூட்டப்பெற்றன.

1. சாதிப் பற்றில்லாதவரோ அதுசார்ந்த சமயப் பற்றில்லாதவரோ குமுகாயத்திலும், அரசியலிலும் தலைமையும் அதிகாரமும் வாய்ந்த பதவிகளைப் பெறுவதற்குத் துளியும் வாய்ப்பில்லை.

2. ஏழைகளைவிடச் செல்வமும், நன்மதிப்பும், அரசியல் அதிகாரமும் படைத்தவர்களிடமே உள்ளூரச் சாதி வெறி உள்ளமை.

3. ஒவ்வோர் அரசும் பிரித்தாளுகின்ற அரசியல் சூழ்ச்சிக்கு இலக்காகச் சாதிப் பூசல்களையும் அதனடிப்படையில் அமைந்த சமயப் பூசல்களையும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ பயன்படுத்திக் கொண்டமை.

4. அவ்வப்பொழுது தோன்றிக் குமுகாயச் சீர்திருத்தக்காரர் களாகவும் முன்னேற்றப் போக்குடையவர்களாகவும் பகுத்தறிவாளர் களாகவும் தம்மை மக்கள்முன் அறிமுகப்படுத்திக் கொண்ட பலர், தம்மளவிற்காவது சாதி அமைப்புகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வாராகாமையால், அவர் தம் கொள்கைகளின் மேல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மாறாத நம்பிக்கையின்மை.

5. தீண்டாமை யொழிப்பையே 'சாதி' யொழிப்பு என்று தவறாகக் கருதியதுடன், கடுமையான தீண்டாமையால் வரும் கேடுகளை விட,

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/35&oldid=1164345" இலிருந்து மீள்விக்கப்பட்டது