பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவான, எளிய சாதி ஏற்றத் தாழ்வுகளாலேயே சாதி நிலைத்திருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளாமை.

6. அரசினர் பதிவுகளிலும், ஆவணங்களிலும், வழக்கு மன்றங்களிலும் சாதிப்பாகுபாடுகள் வற்புறுத்தப் பெறுகின்றமை.

7. பண்டையில் ஆரியப்பார்ப்பன சமயகுரவர்களும், சாதி வெறியர்களும் அரசியலில் தலைமையிடம் பெற்று, அறநெறி என்ற பெயராலும், விரகாலும் சாதிப்பாகுபாடுகளையும் பழக்க வழக்கங்களையும் வற்புறுத்திக் கெடாது காத்தமையும், இக்காலத்தும் சாதி சமய வேறுபாடற்ற அரசு என்று தவறாகக் கூறி கொண்டு எல்லாச் சாதி சமய அமைப்புகளுக்கும் சட்டத்திலும் நடைமுறைகளிலும் பாதுகாப்பளிக்கப் பட்டமையும்.

8. பொருள் நலமும் உறவு நலமும் கருதி ஒவ்வோர் இனத்தாரும் தம் தம் இனத்துக்குள்ளேயே மண நிகழ்வுகளையும், பிண நேர்ச்சிகளையும் முன்னிட்டுப் புழங்கிக் கொண்டமை.

9. ஒரு சாதியாரால் பிற சாதியார்க்குக் ஏற்பட்ட கொடுமைகள் ஒருவாறு தணிந்தவுடன், கொடுமைதரா நிலையில் சாதி அமைப்பு மென்மையான வினை முறைகளால் மக்களை ஆட்கொண்டு ஒரு தீமையில்லாத நோயாக அவர்களைப் பற்றி நின்றமை.

10. ஒவ்வோர் இனத்தாரும் தம் தம் சாதி அமைப்பால் ஒருவகைப் போலிப் பெருமையையும், தம்மினும் தாழ்ந்தாரை விடத் தாம் உயர்ந்தவர் என்ற பொந்திகையை கொண்டுள்ளமை.

மேலே கூறப்பெற்ற தலையாய காரணங்களாலும் பிறவற்றாலும் சாதியென்னும் கொடிய நஞ்சு எல்லாருடைய நெஞ்சுகளிலும் குருதி நாளங்களிலும் ஏற்றப் பெற்று வலிவு பெற்று வருகின்றது. அறியாத கல்லா மாந்தரிடம் தோன்றி முள் காடாகப் படர்ந்த இத்தீய அமைப்புகள் இக்கால் கற்றவர்பாலும் வலிந்து புடை திரண்டு வருவது எல்லா நல்ல உள்ளங்களிலும் பெரியதொரு கவலையை உண்டாக்கியிருக்கின்றன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதி அமைப்புகள் தோன்றி மாணவர் தம் நெஞ்சுகளில் தம் தூண் போன்ற கால்களை ஊன்றிக் கொண்டுள்ளன. இவை தமக்கு ஆங்காங்குள்ள சாதிக் கிறுக்கர்களும் வெறியர்களும் பலவகையான காரணங்களைக் காட்டிப் பொருளாலும் வினையாலும் வலிவூட்டிக் கொண்டு வருகின்றனர். தம்மை எல்லாரினும் உயர்ந்தவராகக் கருதிக் கொள்ளும் பார்ப்பன முதலைகள் சில தத்தமக் கென்று அரசியல் துறைகள் சிலவற்றில் பட்டயங் கட்டிக் கொண்டு ஆங்காங்குச் சாதி மூட்டம் போட்டு வருகின்றனர். அவர்களுக்கு மடத் தலைவர்கள் சிலர் தோன்றாத் துணையாகி அவர்களை வேண்டாத இடத்திற் கெல்லாம் இட்டுக் கொண்டு போகின்றனர். தொடக்க நிலைப் பள்ளி முதல் பாராளு

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/36&oldid=1164346" இலிருந்து மீள்விக்கப்பட்டது