பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 
‘விடுதலை'யில் 'சாதி'
 

நாம் ஒரு தவற்றைப் பிறர்க்குச் சுட்டிக்காட்டித் திருத்தம் செய்து கொண்டு வருங்கால், நாமே அத்தவற்றைச் செய்யாமல் இருக்கிறோமோ என்று விழிப்புடன் பார்த்துக் கொள்ளல் வேண்டும். நான் சொல்வது போலச் செய், ஆனால் நான் செய்வது போலச் செய்யாதே (Do as say but don't do as i do) என்று பொது மக்களிடம் சொல்லுதல் கூடாது.

'ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு?'

என வள்ளுவர் கேட்டிருக்கின்றார். பொதுவான மாந்தனுக்கே இந்த இலக்கணம் என்றால் பொதுத்தொண்டு, குமுகாயச் சீர்திருத்தம் செய்யவேண்டியவர்களுக்கோ இக்கண்ணோட்டம் மிகுதியும் வேண்டும்.

பெரியார் ஈ.வே.இரா. அவர்களின் இயக்க இதழாக நடந்து வரும் ‘விடுதலை', தமிழகத்தின் தன்மதிப்புக் கழக ஏடாகும். பகுத்தறிவுக்கேற்ற செய்திகளுக்கும், குமுகாயச் சீர்திருத்தச் செய்திகளுக்குமே இன்றியமையாமை காட்டி வெளிவரும் ஏனெனில் விடுதலை இதழில், சாதிப் பெயர்கள் வருவது வருந்தற்குரியது மட்டுமன்று கண்டித்தற்குரியது. ஏனெனில் விடுதலை கொண்ட குமுகாயத் திருத்தங்களுள் சாதி யொழிப்பும் தலையாய வேலை யில்லையா?

எடுத்துக் காட்டாகக் கடந்த சில விடுதலை இதழ்களில் வந்த 'சாதிப்' பட்டங்கள் நம்மை மிகவும் வருந்தவும் நாணவும் செய்கின்றன.

பெரியாரவர்கள் 4-10-66 அன்று குடியேற்றத்தில் பேசவிருந்த விளம்பரத்தில் "எம்.வி.சாமிநாத முதலியார் தலைமையில் பெரியார் பேசுவார்" என்று வெளியிட்டிருப்பதும், 13.9.66 அன்றைய தாளில் 29.8.66 அன்று மாத்துரில் பெரியார் தலைமையில் நடந்த திருமணத்தில் திரு. சகதீச முதலியார் அவர்களும் பேசினார் என்று வந்திருப்பதும், பெரியார்

 

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/40&oldid=1164351" இலிருந்து மீள்விக்கப்பட்டது