பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'ஓ! தமிழ இனமே! நீ அடிமையாக வாழ்ந்தாலும் சரி; அரசனாக வாழ்ந்தாலும் சரி, பதியெழுவறியாப் பழங்குடியாக இருந்த இடத்திலேயே இருந்தாலும் சரி; அல்லது பதிபெயர்ந்து அகன்று பாரெங்கிலும் உள்ள நாடுகள் அனைத்திலும் போய்ப் பதிந்து வாழ்ந்தாலும் சரி; உன்னை நீயேதான் தாழ்த்திக் கொள்ளல் வேண்டும்! அத்தனையளவுக்கு ஆரியம் உன்னை அடிமாற்றியுள்ளது; திரிபு படுத்தி உள்ளது. அதன் அடிப்படையாக உள்ள இறுதி அணுவும் உன் உடலினின்று அறக் கழன்றாலன்றி உன் குடிபெயர்ப்பாலும் பயனில்லை; கொடிச் சிறப்பாலும் உயர்வில்லை; நீ என்றென்றும் ஆரியத் தமிழனே! உன்னை ஈடேற்றுபவர் இனி பிறப்பரா என்பது ஐயமே' என நெஞ்சு புழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை!

தென்மொழி: சு:11 8-9, (1974).

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/52&oldid=1164369" இலிருந்து மீள்விக்கப்பட்டது