பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்பது ஆரியப் பார்ப்பனர்களுக்குத் தெரியும். எனவேதான் சாதியுணர்வுகள் மீண்டும் மீண்டும் தழைத்து வருகின்ற வகையில் அவர்கள் தண்ணீர் ஊற்றிக் கொண்டும் எருப்போட்டுக் கொண்டுமே என்றும் இருப்பார்கள். ஆகவேதான் சாதிப் பெயர்களைச் சொல்லி அழைப்பது, திருமண அழைப்பிதழ்களில் சாதிப் பெயர்களை விடாமல் சேர்க்க வேண்டும் என்று எழுதித் தருவது, பிறப்பியம் எழுதுகையில் சாதி மரபைத் தவறாமல் குறிப்பிடுவது, நீத்தார் நினைவு நாளில் சாதி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது முதலிய நிகழ்ச்சிகளின் வழியாகச் சாதிகளின் நிலைகளை நமக்கு விடாமல் நினைவூட்டிக் கொண்டும் நிலைநாட்டிக் கொண்டும், அதன் வழித் தம்மைப் பிராமண நிலையினின்று தாழ்விக்காது நிலைநிறுத்திக் கொண்டு பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.

முறைப்படி அவர்கள் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்ளுகையில் நம்மைச் சூத்திரர் என்றே சொல்லுதல் வேண்டும். அப்படித்தான் ஆண்டாண்டுக் காலமாய் நம்மைச் சொல்லிக் கொண்டும் வந்தார்கள். இப்பொழுது சமயம் வாய்க்கும்பொழுதெல்லாம் அல்லது அவர்களுக்குள் நம்மைச் சுட்ட வேண்டி வரும்பொழுதெல்லாம் அந்தச் சூத்திரன் இது செய்தான் என்றே சொல்லியும் வருகிறார்கள். பிராமணர் என்பது வருணாச்சிரம முறைப்படி சாதிப் பிரிவு அன்று; குலப் பிரிவு. குலப் பிரிவால் அவனை அழைத்துக்கொள்ளும் அவன் நம்மைச் சாதிப் பிரிவால் ஏன் அழைக்கின்றான். எனில் இச் சாதிப் பிரிவுகளின் பெயர்கள் தொழிலடிப்படையில் தோன்றிய பெயர்கள் என்பது அவனுக்குத் தெரியும். மேலும் பிள்ளை, முதலி, செட்டி, இரெட்டி என்பவை யெல்லாம் தூய தமிழ்ப் பெயர்களாகவே இருக்கும். இந்தப் பெயர்களால் நம்மை அழைக்க விரும்பும் அவன், சூத்திரன் என்ற பெயரால் நம்மை ஏன் வெளிப்படையாக அழைக்க விரும்பவில்லை யென்றால், அந்தப் பெயரின் இழிவை நாம் உணர்ந்து விட்டோம் என்பதால்தான். கடந்தகால இழிவை நாம் உணர்ந்து விட்டோம் என்பதால்தான். கடந்தகாலத் திராவிட இன மீட்பு முயற்சிகளால் ஏற்பட்ட நன்மைகளுள் இதுவும் ஒன்று, சூத்திரன் என்றால், தேவடியாள் மகன், வேசி மகன், அடிமை என்கின்ற பொருளெல்லாம் நமக்குத் தெரிந்து விட்டது என்பதை அவன் உணர்கிறான். அதனால்தான் சூத்திரன் என்ற பெயரால் நம்மை அழைக்காமல் தொழிற்பெயரடிப்படையில் அமைந்த பிரிவுப் பெயர்களையே சாதிப் பெயர்களாக ஆக்கி, அவற்றால் நம்மை அழைத்து வருகிறான். நாமும் அதில் ஏதோ செருப்பாலடித்த பெருமையிருப்பதாகக் கருதி அதை ஒப்புக் கொண்டுவருகிறோம். மற்றபடி அவன் பிராமணனா யிருக்கையில், நாம் சூத்திரர்தாமே என்பதை நாம் உணர்வதில்லை. அப்படி உணராமல் இருக்க சாதி நிலைகளால் ஏதோ ஒரு பெருமையிருப்பதாக நம்மை நம்ப வைத்திருக்கின்றான். அந்த நிலையை நாம் நன்றாக உணர வேண்டுமானால், அவன் சிலரைச்

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/56&oldid=1164390" இலிருந்து மீள்விக்கப்பட்டது