பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலவிடங்களில் பிள்ளையென்றோ, முதலியார் என்றோ, ரெட்டியார் என்றோ வெறுமே அழைக்காமல், நாம் உவக்கும் வண்ணம் என்ன பிள்ளைவாள், முதலியார்வாள், ரெட்டியார்வாள் என்று அழைப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சாதிப் பெயரால் நம்மை அழைப்பது அல்லது அழைத்துக்கொள்வது இழிவு என்றோ தாழ்ச்சி என்றோ நாம் உணர்ந்தால் சாதியமைப்புகளை நாம் கடைப்பிடிக்க மாட்டோம் என்பதால், உயர்வு என்று கருதும்படியே அவன் செய்து வருகின்றான். அதனால் சாதிப் பெயரில் ஒரு கவர்ச்சியோ, பெருமையோ, ஓர் உயர்ச்சியோ இருப்பதாக நாம் கருதிக்கொண்டு, அதனை விட மனமில்லாமல் கடைப்பிடித்து வருகின்றோம். அறிவியல் வளர்ச்சியும், பொது நிலை மலர்ச்சியும் சிறந்தோங்கி வரும் இக்காலத்தில், என்னதான் சாதிப் பெயரில் ஒரு கவர்ச்சியோ, உயர்ச்சியோ இருந்தாலும், அதனைப் போட்டுக் கொள்வதில் அல்லது கடைப்பிடிப்பதில் ஒரு நாகரிகமோ, பொருளோ இல்லை என்று கருதும்படியான ஒருநிலை வந்து விட்டதை உணர்ந்துதான், பார்த்தசாரதி முதலிய படித்த சூழ்ச்சிக்காரப் பார்ப்பனர்கள், அந்த உணர்வுகளை ஒரேயடியாக அழிந்து போய்விடாத வண்ணம், அதை மறைமுகமாக, கலையென்னும் பெயராலும், இன வரலாறு (Social History) என்னும் பெயராலும் வளர்க்கத் தலைப்பட்டிருக்கின்றனர். இந்தக் கொலைகாரக் குறும்பை நாம் விளங்கிக் கொண்டு இதனை முளையிலேயே கிள்ளி யெறிதல் வேண்டும்.

பார்த்தசாரதி முதலியவர்கள் சாதிப் பெயர்களைக் கிண்டிக் கிளறுவதால் இருவகையான நன்மை பெறுகிறார்கள். ஒன்று, சாதிப் பற்று அல்லது வெறியுள்ள அந்தச் சாதியார்கள் அவ்விதழைக் கட்டாயம் பேரளவில் வாங்குவார்கள். அவ்வகையில் மிகுந்த விற்பனையும் கொள்ளை ஊதியமும் கிடைக்கும். இஃது உடனடியான பயன். இரண்டு, அசைவுற்று வரும் பார்ப்பனர் வகுத்த சாதி வேற்றுமைகள் நிலைநிறுத்தப்படும் இது மெதுவாக ஆனால் உறுதியாகக் கிடைக்கும் பயன். அதனால்தான் தினமணிப் பார்ப்பனர்கள் சாதி யிதழ்களைத் துணிவாக வெளியிட முனைந்து வருகின்றனர்.

இந்த நிலையை நாம் மேலும் வளர விடக் கூடாது. பார்த்த சாரதிக்கு சாதி யிதழை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும், கண்டன மடல்களை ஏராளமாக அனுப்பிவைக்க வேண்டும். அவற்றுக்குச் செவிசாய்க்க வில்லையானால் தினமணி கதிர்களை வாங்க வேண்டாம் என்று வாசகரிடத்திலும், விற்க வேண்டாம் என்று கடைக்காரர் களிடத்திலும் கேட்டுக் கொள்ள வேண்டும். மீண்டும் அவ் வேண்டுகோள்கள் கேட்கப் பெறாவிடத்து கடைகளில் விற்பனை நடக்காத வண்ணம் மறியலில் ஈடுபடுத்த வேண்டும். எஃது எப்படியாயினும் சாதி நிலைகளுக்கு இக்கால் சிறிது தளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. போகப்

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/57&oldid=1164391" இலிருந்து மீள்விக்கப்பட்டது