பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்டல் குழு அறிக்கை செயற்படுத்தம்

- ஒரு பொது மதிப்பீடு !


சாதி, கல்வி, பொருளியல்-மூன்று நிலைகளையும்
கணித்தறியும் முறையே பயனுடையதாக இருக்கும்!
எவ்வாறாயினும் சாதிப் பிரிவுகளை
நிலைப்படுத்தி விடக் கூடாது!

வி.பி.சிங் தலைமையேற்றிருக்கும் தேசிய முன்னணி அரசு, தன் தேர்தல் அறிக்கையில் கூறிய உறுதிமொழிக்கு இணங்க, மண்டல் அறிக்கையை ஆகத்து 7ஆம் பக்கல் முதல் செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது.

இந்த மண்டல் குழுவின் அறிக்கை செயலுக்கு வந்தால், இந்தியாவில் சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களாகக் கருதப் பெறுபவர்களுக்கு, நடுவண் அரசுப் பணிகளாகிய அஞ்சல் துறை, தொடர்வண்டித் துறை, வருமான வரித்துறை, வைப்பகத்துறை, வானொலி, தொலைக்காட்சித் துறை, பொருளியல் துறை, அறநெறித் துறை, செய்தித் துறை, படைத்துறை, ஆட்சித்துறை, வானூர்தித் துறை முதலிய கொழுத்த வருவாய் உள்ள அனைத்துத் துறைகளிலும், பார்ப்பனர்களுக்கும், மேலாளுமை முதலாளிகளுக்கும் வணிக வகுப்பினர்க்கும் உள்ள வாய்ப்புகளும் வசதிகளும் மளமளவென்று சரிந்து போகும். மாறாக, இதுவரை இத்துறைகளால் வரும் வாழ்க்கை நலன்களையே கண்டறியாத ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மக்களிடம் இவற்றில் ஒரளவு இடம் பெறும் வாய்ப்புகள் ஏற்படும். இதுவரை அவர்கள் இத்துறைகளைத் தகுதிகள்,

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/65&oldid=1164503" இலிருந்து மீள்விக்கப்பட்டது