பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எண்ணிப் பார்க்கும்படி அவர்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

{{gap}இனி, அரிஜன் (அரியின் மக்கள்) என்னும் பெயர் இவர்களுக்கு 'வருணாச்சரம'த்தை ஆதரிக்கும் காந்தியால் - ஒரு போலிப் பெருமையாக இடப்பெற்றதாகும் என்பதை இவர்கள் உணர்தல் வேண்டும். அப்பெயர் இவர்களை இழிவுபடுத்துவதே அன்றிப் பெருமைப்படுத்துவதில்லை. மக்களில் ஒரு பகுதியினர் 'அரியின் (கடவுளின்) மக்கள்' என்றால், மறு பகுதியினர் யாருடைய மக்கள் என்பதற்கு அக்காந்தியாலும் விடை கூற முடியாது. எனவே அவ்வாறு அழைப்பது மிகப் பெரும் சூழ்ச்சியும் ஏமாற்றுமே ஆகும். ஆகவே, அந்தப் பெயர் கொண்டு தங்களை அழைத்துக் கொள்வதையும் இவர்கள் தவிர்த்துக் கொள்ளுதலே இவர்களின் தன்மானத்திற்குப் பெருமை தருவதாகும்.

அடுத்து, இவர்கள் தங்களைத் தாங்களோ, பிறரோ "தாழ்த்தப்பட்டவர்கள்" என்று கூறிக் கொள்வதும், கூறுவதை ஏற்றுக் கொள்வதும் தன்மானமின்மையும், தன்மதிப்பு (சுயமரியாதை) இழப்புமாகும் என்பதை உணர்தல் வேண்டும். இவர்களை ஆரியப் பார்ப்பனரே, தங்களின் வேத புராண, இதிகாசங்களை இவர்கள் ஏற்று மதித்துப் போற்றிக் கொள்ள மறுத்ததால், தாழ்த்தி வைத்தனர்; ஊருக்கு வெளியேயும் வாழ வைத்தனர். அதுவுமின்றி, இவர்களைத் தாழ்ந்தவர்கள் என்று இழிவாகவும் கூறினர். இதனடிப்படையில் இவர்களே தங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று செயப்பாட்டு முறையில் தாங்களே கூறிக் கொண்டனர். இவ்வாறு கூறிக்கொள்வது மாந்தப் பிறவியையே இழிவுபடுத்துவதாகும். எனவே, இவர்கள் இப் பெயராலும் தங்களை அழைத்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

இனி, எல்லாவற்றுக்கும் மேலாக, இக்கால், தங்களைத் 'தலித்' என்னும் சொல்லால் கூறிக் கொள்வது தாங்கள் தமிழினத்தினர் என்னும் மெய்ம்மத்தையே இழந்து கொள்ளும் இழிவு சான்றதாகும். தலித் (Dalith) என்னும் மராட்டியச் சொல்லுக்குப் பள்ளம், பள்ளத்தாக்கு என்பது பொருள். இச்சொல் இடவாகு பொருளாகப் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டவன், அல்லது, தள்ளப்பட்டவன் அல்லது அமுக்கப்பட்டவன் என்றெல்லாம் பொருள் தரும். இதற்கு ஒடுக்கப்பட்டவன், அடக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்தில் Depressed என்னும் சொல்லுக்கு அழுத்தப்பட்டவன் என்னும் பொருள் கொண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பிரைத் Depressed Classes என்று அழைப்பது போல், 'தலித்' என்னும் சொல்லால் இவர்கள் வீழ்த்தப்பட்டவர்கள் பின்தள்ளப்பட்டவர்கள் அடக்கப்பட்டவர்கள் 'ஒடுக்கப்பட்டவர்கள்' என்று அழைத்துக் கொள்கின்றனர். இச்சொல் இந்தியாவின் அனைத்து இனக் கூறினர்க்கும் ஒரு பொதுவான சொல்லாக வழங்கப் பெறுவது ஒரு வகையில் தக்கதே எனினும், தமிழின வரலாற்றடிப் படையில் தாங்கள் சார்ந்த தமிழ் இனத்தின் மூதாதையர் என்பதையும்,

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/73&oldid=1164485" இலிருந்து மீள்விக்கப்பட்டது