பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பார்ப்பனரை எதிர்த்து வெளியேறியவர் என்னும் பெருமையையும் குறிக்கும் பழந்தமிழர் என்னும் சொல்லைவிடச் சிறந்ததாகக் கொள்ள முடியாது. எனவே, ‘தலித்’ என்பதால் இன இழப்பே ஏற்படும். இன இழப்பு அச்சு அடையாளமற்ற நாடோடி ஏதிலியர் என்னும் நிலையை ஏற்படுத்தி விடலாம். மேலும் இன்றைய இன உரிமை மீட்பு முயற்சிகளுக்கிடையில் இச் சொல் பொருளும் பொருத்தமும் உடையதன்று.

எனவே, இறுதியாக தமிழினத்தில் 'தாழ்த்தப்பட்டவர்' 'ஆதிதிராவிடர் அரிஜன் தலித்’ என்றெல்லாம் பிறரால் கூறப்பெறும் அல்லது தாங்களே கூறிக் கொள்ளும் சில வகுப்பினர், எந்தநிலையிலும், தமிழ் மொழிக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், மற்ற இலக்கிய, கலை, பண்பாடு நாகரிகங்களுக்கும் முழு உரிமையுடைய வகையில் தங்களைப் பழந்தமிழர் என்றேகூறி, இன நிலையில் நிலை நிறுத்திக் கொள்ளவும், பெருமைப்பட்டுக் கொள்ளவும், அரசியல், பொருளியல் நிலையில் தங்களுக்குற்ற உரிமைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளவும் பாடுபடுவார்களாக,

தமிழ்நிலம், இதழ் எண்: 170. (1994)

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/74&oldid=1164480" இலிருந்து மீள்விக்கப்பட்டது