பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.நாம் தமிழரல்லர் !
 

பள்ளென்போம்; பறையென்போம்;
நாட்டா ரென்போம்!
பழிதன்னை யெண்ணாமல் வண்ணா
ரென்போம்!

பிள்ளையென்போம்; முதலியென்போம்;
நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர், படையா
ளென்போம்! -

எள்ளல்செய் திழிக்கின்றோம். தாழ்விக்
கின்றோம்!
எண்ணுங்கள், நமைத் தமிழர்
என்கின் றோமா?

குள்ளமனப் பான்மையிது
தொலையு மட்டும்
கூசுங்கள்; நாணுங்கள்;
தமிழ்நாட் டாரே!

 
தென்மொழி, இயல்-1, இசை-13 (1960)