பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும் !

சாதி யொழித்திடல் ஒன்று-நல்ல தமிழ் வளர்த்தல்மற் றொன்று! பாதியை நாடு மறந்தால்-மற்ற பாதி துலங்குவ தில்லை! . - - - பாவேந்தர் சாதிநிலை வேரறுத்துச் சமயநிலை சீர்திருத்திச்

சமவுடைமைப் பொதுவுணர்வுக் கொள்கை செய்து, பாதியிலே மொழியிழந்து, படிப்படியாய்த் தாழ்வுற்றுப் பார்ப்பனியக் கோட்பாட்டுக் கடிமை யுற்றுப் - பூழ்தியிலே நெளிபுழுவாய்ப் புன்மைநிலைத் தேரையதாய்ப் புலங்கிடக்கும் தமிழனிடைப் புழங்கக் கூறி, - ‘வாழ்தியடா தமிழா, நீ, எனவாழ்த்துப் பாடுகின்ற

நாளொன்றை வரவழைப்போம்; வருவீர் மக்காள்!

- - பாவலரேறு இந்தியா வேறுபாடுகள் மிகுந்துள்ள ஒரு நாடு! -

- இந்தியா பல இன மக்கள் வாழ்கின்ற, பல மொழிகள் பேசப்பெறுகின்ற ஒரு பெரிய நாடு. பலவகையான வேறுபாடுகள், சாதிகள், குலங்கள், கோத்திரங்கள், கிளைப் பிரிவுகள் முதலியன, குப்பைத் தொட்டியில் ஈக்கள் மொய்ப்பன போல் உள்ள பெரிய ஒரு நிலப்பரப்பு இது. இவற்றின் தீ நாற்றத்தையெல்லாம் அடியோடு மூடி மறைத்துவிட்டு, அரசியல் ஊதியத்துக்காக - பொருள் நாட்டத்திற்காகத் தேசியமும்

7