பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

பகல் அகலாமல், அக்குழவியைக் காத்துக் கிடந்தது அக் காரான்.

இவ்வாறு நாட்கள் ஏழு கழிந்தன. பாண்டி நாட்டு வயனங்கோட்டில் வாழும் இளம்பூதியென்ற அந்தணன் அவ்வழியாகச் சென்றான். அவன் காதில் குழவியின் அழுகை ஒலிகேட்டது. மக்கள் வழங்கா இடத்தில் மகவின் கூக்குரல் கேட்டு அந்தணன் சிந்தை நொந்தான்; அக் குரல் வந்த இடத்திற்குக் காதலியோடு விரைந்து சென்றான். ஆங்குப் பசு காத்து நிற்கும் பச்சிளங் குழவியைக் கண்டான். பெரு மகிழ்வு கொண்டான். பிள்களப் பேறற்ற தனக்கு, இறைவன் அளித்த பேரருட் செல்வம் அது என எண்ணி அக மகிழ்ந்தான். ‘இவன் ஆமகன் அல்லன்; :என் மகன்’ எனக் கூறி களிகூர்ந்தான். குழவியை வாரி அணைத்து, காதலி கையில் ஈந்து, “நம்பி பிறந்தான்; பொலிக நம் கிளை” என வாழ்த்தினான்.

அந்தணன், அருமையாகக் கிடைத்த குழந்தையோடு தன்னூர் அடைந்தான். தமரைக் கூட்டினான். மகப்பேறுற்ற மாட்சியை அவர்க்கு அறிவித்தான், ஆகாத்தோம்பிய அருமையை நினைந்து மகனுக்கு ஆபுத்திரன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தான். இளம் பூதியும் அவன் இல்லக்கிழத்தியும், ஆபுத்திரனைப் பெற்றமகனினும் பேரன்பு காட்டிப் பேணி வளர்த்தனர். ஆபுத்திரன் வளர்ந்து பெரியவனான், மறையோர் முறைப்படி முந்நூல் அணிவதன் முன்னர், மகன், ஆயகலைகள் அறுபத்துநான்கிலும் ஆழ்ந்த அறிவுடையனாதல் வேண்டும் என இளம்பூதி விரும்பினன். நல்லாசிரியனைத் தேடி நம்பியை அவன்பால் அனுப்பி வைத்தான். ஆசிரியன்பால், ஆபுத்திரன் அந்தணர்க்குரிய அரு