பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தறியா வானுலகத்து வேந்தே வருத்தி வருவாரின் வாட்டும் பசியைப் போக்கி, அவர் மகிழ் முகம் கண்டு இன்புற உதவும் இத் தெய்வக்கடிஞை ஒன்றே போதும். இதனினும் சிறந்தது உன்னால் அருளத்தக்கது யாது உளது. நீ விரும்பி அளிப்பன எதையும் நான் வேண்டேன்” என அவனை மதியாது கூறி மறுத்து விட்டான்.

ஆபுத்திரன் ஆணவம் கொண்டு உரைத்த உரைகளை இந்திரன் கேட்டான். “என்பால் வரம்வேண்டி இருந்தவம் புரிவோர் பல்லோர்; ஆனால் இவனே, நான் வருந்தி வந்தளிப்பதையும் வேண்டேன் என வெறுத்து விட்டான். வேண்டாமையாகிய அவ்விழுச் செல்வத்தை இவனுக்கு அளிப்பது இவன் கையில் உள்ள அப்பிச்சை ஒடு. அதைப் பயனிலதாக்கி இவன் செருக்கடக்குதல் வேண்டும்; அதை இன்றே செய்வேன்” எனச் சிந்தை யுட்கொண்டான். உடனே மக்கள் விரும்பும் மழை, அவர் விரும்புமளவு விரும்பும் காலத்தில் பெய்க என ஆணையிட்டான். அதனுல் பன்னிரண்டு ஆண்டுக் காலமாக, மழை பெருது வறுமையுற்ற பாண்டி நாட்டில் பல்வகை வளங்களும் பெருகின. பசியால் வருத்தும் உயிரைப் பார்ப்பது அரிதாயிற்று. அம்பலத்தில் அதுகாறும் கேட்டிருந்த ஊணொலி அரவம் அடங்கி ஒடுங்கிவிட்டது. செல்வச் செருக்கால் செய்தொழில் இழத்து காமுகராகிக் கணிகையர் பின்திரிவோரும், சுடு சொல் வழங்கி அடுதொழில் புரிவோரும், வழிநடை புரிவோரும் வந்திருந்து வம்புமொழி பேசி வட்டும் சூதும் ஆடும் இடமாய் வனப்பிழந்து விட்டது.

பசி நோயுற்று வருவாரைப் பெறாமையால் ஆபுத்திரன் அம்பலத்தை விட்டு அகன்றான்; ஊர் ஊராக