பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

யும் வேறு பெறுவதன் முன்னர், இந்நாடு பன்னீராண்டு காலம் பருவ மழையின்மையால் பாழுற்றது. தாய், தானீன்ற மகவு பசியால் வருந்தவும், அதன் பசியைப் போக்க நினையாது தன் பசியைப் போக்கிக்கொள்ளும் பெரும் பஞ்சம் தலை விரித்தாடியது; காயும் கோடையில் கார் தோன்றியதே போல் நீ வந்தடைந்தாய்; வந்த பின்னர், வானம் பொய்த்திலது, வளம் பெருகிற்று. உயிர்கள் பசி நோய் உணர்ந்தில. இந்நிலையில் நீ இந்நாட்டை மறந்து துறந்து செல்லின், இந்நாட்டு மக்களும் மாவும் பெற்ற தாயாரை இழந்தார் போல் பெருந்துன்புறுவர். துயரால் துடிக்கும் உயிர்களைக் காத்தலே உயர்ந்தோர் கடனாம்; அதை விடுத்து, அரச! துறந்து பெறும் பேரின்ப நிலையினை உன் உள்ளம் விரும்புமாயின், இம் மாநிலம், ‘உயிர்கள் உறு துயர் உறத் தான் பேரின்ப நிலையினைப் பேணிக் கிடந்தான்’ என நின்னைப் பழிக்கும். தன்னலம் கருதாது பிறர் நலம் பேணலே மன்னர்க்கு அறமாம். அதை நீ மறத்தல் மதியுடைமை அன்று” என எடுத்துரைத்தான்.

அமைச்சன் உரைத்த அறிவுரை அரசன் உளத்தில் சென்று பதிந்தது. தன் பிறப்புண்மையை அறிய வேண்டும் என்ற வேட்கை மிகுதியால் மறைந்துபோன கடமை யுணர்ச்சி காவலன் உள்ளத்தில் மீண்டும் இடம் பெற்றது. “அமைச்சர் முதல்வ! நீ உரைத்த அறவுரை நன்று. ஆயினும் மணிபல்லவம் சென்று என் பழம் பிறப்புணரும் வேட்கையை என்னால் விட இயலாது. சென்று வர ஒரு திங்கள் ஆகும். அதுவரை ஆளும் பொறுப்பினை நீ ஏற்றல் நின் கடன்” எனக் கூறி அதை அவன் பால் ஒப்படைத்துக் கலம் ஏறி மணி பல்லவம் அடைந்தான்.