பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ஒன்பதின்மரின் உடல் எலும்புகள் இவை. அவர் இறந்தமை அறிந்து, அவருடன் வந்து, அவர் அளித்த உணவுண்டு வாழ்ந்தோர் வாழ்விழந்து விட்டுச் சென்ற உடல் எலும்புகள் இவை” எனக் கூறி அவ்வெலும்புக் குவியல்களை வரிசை வரிசையாகக் காட்டினாள்.

உடன் வந்தோர் எலும்புக் கூடுகளைக் கண்டு, மன்னன் மனங்கலங்கியிருக்க, தீவதிலகை மீண்டும் அரசனை நோக்கி, “அரசே; உன்கலம் உறுபயன் இழந்தமை உணர்ந்து, உள்ளம் வருந்தி உயிர்விட்ட உன் உடல் எலும்புகள் நீ அமர்ந்திருக்கும் இப்புன்னைக்குக் கீழ் உளது; ஈண்டுக் கிடந்த எலும்புகள் மீது கடல் அலைகள் மணல் கொணர்ந்து குவிக்க அதன் மீது தழைத்து வளர்ந்துளது இப் புன்னை. அரசே! நின் உயிர் கொன்றாய்; நின் உயிர்க்கு இரங்கி நின்பின் வந்த பலர் உயிர் கொன்றாய். உயிர் பல கொன்று பெருங்கொலை புரிந்த நீ கொற்றவனாய்க் கோலோச்சு கின்றனை; நன்று நின் வாழ்க்கை” என அவனை நகைத்துப் பழிப்பாள் போல் பாராட்டி மறைந்தாள்.

அவள் மறைந்ததும் அரசன் எழுந்தான்; மணி மேகலை துணை செய்ய மண்ணை அகழ்ந்தான்; ஆங்குத் தசையெலாம் நீங்க, வெண்ணிறச் சுண்ணம் பூசப் பெற்றதுபோல் வீழ்ந்து கிடந்த தன் உடல் அமைப்பைக் கண்டான. அவன் கண்ணும் மனமும் கலங்கின. செயலிழந்து போனான்.

மன்னன் மயக்கம் உற்றதை மணிமேகலை கண்டாள்.அரசன் மெய்யைப் பற்றிய மயக்கத்தை முதலில் போக்கி