பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கண்டு, மனம் நிறைவுற்ற மணிமேகலை, “அரசே! ‘எடுத்த இரு பிறவியும் பழியுடைய’ என உன்னி உளம் வருந்தாதே. உன்னைப் பிரிந்த உன் நாட்டு மக்கள் உன் வருகையை எதிர்நோக்கி வந்திருப்பர். வங்கம் ஏறி விரைந்து சென்று, அவர்க்கு வாழ்வளித்து விளங்குக! நான் வஞ்சிமாநகர் செல்கிறேன்” எனக் கூறி, அவன் பால் விடை பெற்றுக்கொண்டாள்.

புண்ணியராசனும், சாவகம் புகுந்து, அறப்பேராட்சி செலுத்திப் பெருமை பெற்றுத் திகழ்ந்தான்.