பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

ஒரு சிறு நாடிருந்தது. அந் நாட்டை அத்திபதி எனும் அரசன் அறம் பிறழாது ஆண்டு வந்தான். அதனால் அவன் நாட்டில் பழி பாவங்கள் இலவாயின. அவன், சித்திபுரம் எனும் சிறந்த நகரத்தைச் சேர்ந்த சீதரன் எனும் சிற்றரசனுடைய மகளாய நீலபதி எனும் நிகரிலா அழகுடையாள அரசமாதேவியாய் அடைந்து இன்புற்றிருந்தான். அவர்களுக்கு இராகுலன் என்ற ஒரு மகன் பிறந்தான். கால ஞாயிற்றின் கவின் பெற்றுக் காளைப் போல் வளர்ந்து வரைவிற்குரியனாய் விளங்கினான். இரவிவன்மன், தன் இளைய மகள் இலக்குமிக்கு ஏற்ற கணவன் அவ்விராகுலனே எனத் தேர்ந்து, இருவர்க்கும் மணம் முடித்து வைத்து மகிழ்ந்தான்.

மனங்கொண்ட இலக்குமி பிறந்த நாட்டைப் பிரிந்து புகுந்த பூருவ நாடடைந்து பெருவாழ்வு வாழ்ந்திருந்தாள். அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஒம்பல், துறவோர்க் கெதிர்தல், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல் முதலாம் இல்லறக் கடமைகளை இனிதாற்றி, நல்லற மனவியாய் விளங்கினாள்.

இலக்குமி உண்மைக் காதலின் இயல்பை உணர்ந்திருந்தாள். அதனால் ஊடுதல் காமத்திற்கு இன்பம் என்ற காதலறத்தைக் கடைப்பிடிக்க விரும்பினாள். அவ்வாறே ஒரு நாள், கணவனோடு ஊடிக்கொண்டு ஒரு பொழில் அடைந்து மறைந்திருந்தாள். இராகுலன் அவள் ஊடலைத் தணித்து அவள் கருத்து மாறுபாட்டைப்