பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

ஈங்கிவன் எவ்வாறு வந்தான்” எனக் கேட்டு வெகுண்டான்.

கணவனின் வெகுண்ட நிலைகண்டு இலக்குமி கலங்கினாள். அவன் கூறும் வெஞ்சொற்கள் அவன் வாயை விட்டு வெளிவராவண்ணம் அவன் வாயைப் பொத்தினாள். “காதல! வானுரடிழிந்த வான் புகழ் உடையவன் இம்முனிவன். இவன் மலரடி வணங்கும் மனம் நினக்கு இல்லாமை நாம் செய்த தீவினைப் பயன்போலும்; அத்தகையோனப் பழித்தல் பெருங்கேடளிக்கும் கொடுஞ் செயலாம்” எனக்கூறி அவன் சினத்தைத் தணித்தாள். பின்னர்க் கணவனேடு மாதவன் மலரடி வீழ்ந்து வணங்கினாள். “அமர முனிவ! யாங்கள் நின் பால் அன்பிலேமாயினும், எம்பால் அமுதுண்டு செல்லல் வேண்டும்” என முனிவனை வேண்டிக்கொண்டாள். மனயறத் தலைவியாய் மங்கையர் நல்லாளாய் விளங்கிய இலக்குமியின் வேண்டுகோளை முனிவன் ஏற்றுக் கொண்டான்; அவள் அளித்த அமிழ்து நிகர் உணவை உண்டு அவளை வாழ்த்தி வானூடெழுந்து சென்றான். ஆண்டுகள் சில சென்றன.

ஒரு நாள், பூருவதேயத்து அரசன் அத்திபதியின் மைத்துனனாய பிரமதருமன், தலைநகர் இடவயமா நகர்க்கு வந்தான். அறநூல்களை அறிந்தோனும், முக்கால நிகழ்ச்சிகளையும் முன்னின்றுணரவல்ல மூதறிவுடை யோனுமாய அவன், அரசனை அடைந்து அவனுக்கு