பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

காரணத்தாலோ உரிய காலத்தில் வந்திலன். காலங் கடந்து வந்த குற்றம் அவன் கருத்தை உறுத்திற்று. அவனைக் கண்ட பணியாளின் உடலும் நடுங்கிற்று. அந்நடுக்க மிகுதியால், கால்வழுக்கி வீழ்ந்தான். அவன் வீழ்ந்ததால் அடிசிற் காலம் உடைந்து அழிவுற்றது.

பணியாள் காலம் கழித்து வந்தமைக்கே இராகுலன் அவன்பால் கடுஞ்சினம் கொண்டிருந்தான். அந்நிலையில் பணியாள் கால் வழுக்கி வீழ்ந்து கலத்தைப் பாழாக்கவே, அவன் சினம் அளவிறந்துவிட்டது, அருகில் இருந்த, உடைவாளை எடுத்தான். வேலையாளத் தலை வேறு உடல் வேறாக வெட்டி வீழ்த்தினான்.

இராகுலன் சினம் மிக்குச்செய்த செயலக் கண்ணுற்ற பிரமதருமன், இலக்குமியை அழைத்து, “அரசிளங்குமரி, இராகுலன் அடாது புரிந்த இச்செயலால் இற்றைக்குப் பதினாறாம் நாள் திட்டிவிடம் எனும் பாம்பு தீண்ட இறந்துபோவான்; கணவனைப் பிரிந்து கைம்மை நோன்பு மேற்கொள்ளக் கருதாது நீ, அவனோடு அழல் புகுந்து உயிர் இழப்பாய்; இது நும் ஊழ்வினைப் பயன்; உள்ளம் கலங்காதே” என உணர்த்தினான்.

கணவன் கடுஞ்சினத்தால் நேர இருக்கும் கேட்டினை எண்ணி நடுங்கினாள் இலக்குமி. அந்நிலையில் முனிவன் கூறியவாறே, இடவயமும், நாகநாடும் நில நடுக்கத்தால் கடலில் ஆழ்ந்து போயின. முனிவன்,