பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

முன்னறிந்து மொழிந்தனவற்றுள் ஒன்று உண்மை யானமை காணவே, இலக்குமி, அவன் உறைத்த மற்றொன்றும் மாறாது என்பதை அறிந்து மாளாத்துயரில் ஆழ்ந்தாள்.

தலைநகர் அழிவுற்றது என்பதை அறிந்த அத்திபதி, காயங்கரை நதியைக் கடந்து அவந்திமாநகர் அடைந்து, அதை அரசிருக்கையாகக் கொண்டு வாழ்ந்திருந்தான். பிரமதருமன் கூறிய நாளும் பிறந்துவிட்டது; அரசனும், அவன் சுற்றமும் எவ்வளவோ விழிப்பாயிருந்தும், திட்டிவிடம், இராகுலனை எவ்வாறோ தீண்டிவிட்டது. இராகுலன் இறந்து விட்டான். அவன் உடலை ஈமத்தில் இட்டு எரியூட்டினர். கணவனை இழந்த காரிகை பெருந்துயருற்றாள். பிறவியை வெறுத்தாள். ஊரும், உறவும் ஒன்றுகூடித் தடுக்கவும் கேளாது, தீப்பாய்ந்தும் உயிர்விட்டாள்.

இலக்குமி இறந்துவிட்டாள். ஆனல் அவளாற்றிய இல்லறப் பயன் அழியவில்லை. சாது சக்கரனுக்கு உணவூட்டிய நல்லறம் தனக்குரிய பயனை அவளுக்கு அளிக்க ஆர்வம் கொண்டிருந்தது. அதன் பயனாய், அவள் சோணாட்டில், காவிரிப்பூம்பட்டிணத்தில், பரத்தையர் குலத்தில் பிறந்தும் பலராலும் போற்றிப் புகழப்படும் மாதவியின் மகளாய் வந்து பிறந்தாள். பழம் பிறப்பில் ஆற்றிய பேரறப் பயனாய் தவநெறி மேற்கொண்டாள். அதன் பலனாகவே, உயிர்களின்