பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. காய சண்டிகை

மலைகளில் உயர்ந்தது இமயம். அதனால் அது எக்காலத்தும் பனிப்பாறைகளால் மூடப் பெற்றிருக்கும் பனிக்கட்டிகள் வெண்ணிறம் வாய்ந்தன. பகற்போதில் ஞாயிற்றின் ஒளியும், இராப்போதில் திங்களின் ஒளியும் படர்வதால், இமயம் எப்போது நோக்கினும், வெள்ளொளி வீசித்திகழும் அதனால் அது வெள்ளிமால்வரை எனவும் வழங்கப்பெறும்.

வெள்ளியங்கிரியைச் சூழ உள்ள நாடு விஞ்சையர் நாடு அல்லது வித்தியாதரவுலகு எனப் பெயர் பெறும். பற்பல பேருர்களையும், சிற்சில சிற்றுார்ககயுைம் கொண்ட அந்நாட்டில் வாழ்வார், விஞ்சையர் அல்லது வித்தியாதரர் என அழைக்கப்பெறுவர். விஞ்சையர் அழகிற் சிறந்தவர்! ஆடல் பாடல் போலும் அருங்கல்களில் கைதேர்ந்தவர்! வான வீதியில் உலாவல், வேற்றுருக் கொள்ளுதல் போலும் அறிவுத்திறனும் வாய்க்கப்பெற்றவர் என நூல்கள் நுவல்கின்றன.

விஞ்சையர் நாட்டில், காஞ்சனபுரம் என்பது ஒரு பேரூர். பசியையும், பிணியையும், பகையையும் பாழாக்க வல்ல பெருவளமும், பொன்னும் நவமணியும் போலும் பொருள்வளமும் நிறைந்திருந்தமையால், அம்மாநகர் பெருமதிலால் சூழப்பெற்று அரிய காவலும் அமையப் பெற்றிருந்தது. அப் பேரூரில் காஞ்சனன் எனப் பிறத்த ஊரின் பெயரையே தன் பெயராகக்கொண்ட ஒரு