பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

விஞ்சையன், காயசண்டிகை என்ற தன் மனைவியோடு வாழ்ந்தான்.

காஞ்சனன் கலையார்வம் நிரம்பப் பெற்றவன். மலை வளம் காணல், ஆற்று நீராடல் போன்றவற்றில், ஆர்வம் மிக்கிருந்தான். அதனால், வடகோடியில் உலகெலாம் விரும்பும் வெள்ளிமால் வரையகத்தில் வாழ்ந்திருந்தும், தென்கோடிக் கண்ணதாகிய தமிழகத்தும் பொதியமலைக் காட்சிகளைக் கண்டு களிப்புறவேண்டும்; அம்மலையினின்றும் பெருக்கெடுத்துப் பாயும் காட்டாற்று நீரில் ஆடிக் களிப்புற வேண்டும் என்ற வேட்கையுடையனைன். ஒருநாள், மனைவியோடு வானூடெழுந்து தமிழ்நாடு நோக்கிப் பறந்தான். இருவரும் பொதிய மலையை அடைந்தனர். மலைக்காட்சிகளைக் கண்டு மனங்களித்தனர். அம்மலைவளர் சந்தன மரங்கள் வீசும் மனம் கவர் மணத்தை நுகர்ந்து மகிழ்ந்தனர். அம்மலையினின்றும் பெருக்கெடுத்தோடும் காட்டாற்று வெள்ளங்களின் கவின் மிகு காட்சியைக் கண்டனர். அவற்றில் புகுந்து நீராடிப் பேரின்பம் கொண்டனர். இறுதியில் ஒரு காட் டாற்றங்கரையில், ஆற்று வெள்ளம் அவ்வப்போது கொண்டுவந்து குவித்த வெண்மணல் மேட்டில் அமர்ந்தனர்.

வனப்பு மிகுந்தவள்; விஞ்சைகளில் வல்லவள்; கருத்தொத்த கணவனைப் பெற்றவள் என்றதால், காய சண்டிகை இயல்பாகவே செருக்கு வாய்ந்திருந்தாள். பொதியமால் வரையையும் பெரு வெள்ளம் புரண்டோடும்