173
சாந்தியின் சிகரம்
கவும், அவளுடைய மனம் கலங்காமலிருப்பதற்காகவும், தன் பிதா உயிர் பெற்றெழுந்தால் போதும். இம்மாதிரி இங்கிருக்கிறார் என்பதை அம்மா அறிந்தால் கூட, சந்தோஷப்படுவாளேயன்றி, துக்கப்படமாட்டாள். ஆனால், இந்த சமயம் நாம் எதையும் வெளியிடக் கூடாது. எல்லாவற்றையும், ரகஸியமாகவே நடத்த வேணும்—என்கிற திடமான உறுதியுடன், ரத்தத்தை ஏற்றியதோடு, மேற்கொண்டு செய்ய வேண்டிய சிகிச்சையை, வெகு கனிகரத்துடன் அழகாகச் செய்வதைப் பார்க்க, ஜெயிலதிகாரிக்கு இவனுடைய டாக்டர் தொழிலில் உள்ள திறமையையும், சுருசுருப்பாய் செய்யும் அழகையும் பார்க்கப் பார்க்க, இவனைப் பற்றி வந்துள்ள கடிதங்கள் பொய்யே இல்லை. உண்மையான மதிப்புரைகள்தான் என்றும் தோன்றி, ஊர்ஜிதப்படுத்தியது.. பாவம். விதியின் கொடுமையினால், இப்படியொரு படாப்பழி வந்து விட்டது. பொறுமை என்றால், இம்மாதிரியல்லவா இருக்க வேணும் என்று தனக்குள் எண்ணியபடியே, கவனித்து வந்தார்.
டாக்டர்:- ஸார்! இதோ இந்த மருந்தைத் தருவித்துக் கொடுத்தால், ஊசி குத்துகிறேன். அது செய்தால்தான், இதயம் சரியாக வேலை செய்யும். அதோடு மருந்துகள் உள்ளே வேலை செய்யும் சக்தியை உண்டாக்கும், இல்லா விட்டால், உபயோகமில்லாது போய் விடும். இது மிகவும் விலை உயர்ந்தது என்பது எனக்குத் தெரியும். ஒரு கொலைகாரக் கைதிக்கு சர்க்காரில் இத்தனை பணம் செலவிடுவதற்கு யோசிப்பது சகஜந்தான்..ஸார்! கடவுள் எனக்கு ஏராளமான பணத்தைக் கொடுத்திருக்கிறார். ஆகையால், நான் எத்தனையோ ஏழைகளுக்காக தர்ம வைத்யசாலை வைத்து நடத்தி வருகிறேன்;. அந்தக் கணக்கோடு இதுவும் சேரட்டும். என் பணத்-