உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

174

தில் இந்த மருந்தை தயவு செய்து, உடனே வரவழைத்துத் தாருங்கள். அர்ஜண்டாக அதை ஊசி குத்தினால்தான் சகலமும் பயனளிக்கும். எனக்காக நீங்கள் கருணை காட்ட வேண்டும். நானும் ஒரு கைதிதானே என்று என் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்காதிருக்கக் கூடாது ஒரு கைதியின் உயிரைக் காப்பதற்கு ஒரு கைதியின் வேண்டுகோளை அங்கீகரிக்க வேண்டும்—என்று மிகவும் அழுத்தமாயும், ஒரு வித உணர்ச்சியுடனும் கூறினான்.

எங்கே தன்னுள்ளத்திற்குள் புதைந்து கிடக்கும் புதிய உணர்ச்சியின் வேகத்தில், மர்மம் வெளியாகி விடுமோ! என்கிற பயத்தினால், இதயம் படபடவென்று அடித்துக் கொள்கின்றது. பரிதாபகரமாய், ஜெயிலர் முகத்தை, மறுபடியும் கெஞ்சுவது போல் பார்த்தான். மறு பேச்சின்றி, ஜெயிலர் அப்போதே அந்த மருந்தை வாங்கி வருவதற்கு வார்டரிடம் உத்திரவிட்டார். ஸ்ரீதரனின் முகத்தை எதனாலோ கூர்ந்து கவனித்த ஜெயிலர், “ஸார்! மிகவும் பரோபகாரி, இளகிய மனதுடையவர், என்றெல்லாம் ஜனங்கள் உங்களைக் கொண்டாடி கணக்கு வழக்கற்ற கடிதங்கள் எனக்கு எழுதியிருக்கிறார்கள். அந்த உண்மையை இன்று ப்ரத்யக்ஷமாகப் பார்க்கிறேன். இருப்பினும், இந்த மனிதன் பெருங் கொலையாளி! மகாபாவி பண்ணிய பாவங்கள் எல்லாம் போதாமல், இந்த சிறைச்சாலையில், இத்தனை சிறுமைப்பட்டுத் தவித்தும், அவனுக்கு புத்தி என்பதே இல்லாமல், இங்கேயும் சதா சண்டையும், சச்சரவும் கலகமும் செய்து கொண்டிருப்பதால், இவனைக் கண்டாலே, இங்குள்ள சகலருக்கும் வெறுப்பு. இவன் சாக மாட்டானா என்று கூட சில கைதிகள் சொல்வதுண்டு. அத்-