உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

176

மத்தியில், எப்படி இத்தகைய விஷயங்களில் மனத்தைச் செலுத்திப் படிக்க முடிந்தது. இத்தனை வயதாகிக் கூட, என்னால் உத்யோக உழைப்பைத் தவிர, வேறெந்த வேலையையும் கவனிக்கவே நேரமில்லை. அதில் நோக்கமும் விழவில்லையே ஸார்!

டாக்டர்:- ஒரு தாயானவள், குழந்தையின் பசியறிந்து வேளாவேளைக்கு ஆகாரத்தை ஊட்டி விடுவது தன் கடமையாகக் கொண்டு, முதல் காரியமாய் அதைச் செய்து விடுகிறாள். அதோடு தாயின் கடமை முடிந்து விட்டதாக, சில அறிவிலித் தாய்மார்கள் நினைத்து விடுகின்றார்கள். ஆனால், அவளுடைய கடமை அதுவல்ல, ஆகாரத்தை ஊட்டி தேகத்தை வளர்ப்பது போல், அறிவுப் பாலூட்டி, ஆத்ம ரக்ஷணத்திற்கான அஸ்திவாரத்தைப் போட்டு வளர்ப்பதும், பெத்த தாயின் பொறுப்பாகும். இதே போலத்தான், நாம் உத்யோகம் செய்யும் வரையில் அந்த முறையிலேயே, கவனத்தை மாடு போல் உழைத்து விட்டால், ஆகாரத்தை ஊட்டி, சரீரத்தை வளர்த்த தாயின் பொறுப்பு போலாகி விடுகிறது. அறிவுப் பாலை ஊட்டும் தாயைப் போல், நாம் நமக்குத் தாயாகி ஆத்ம ரக்ஷணத்திற்கான வழியையும் செய்து கொள்ள வேண்டும்.

ஸார். ஏற்கெனவே என்னை ப்ரஸங்கி. உபன்யாஸி என்று சொல்லி விட்டீர்கள். அதையே நான் நிரூபிப்பது போல், தொணதொணவென்று பேசுகிறேன். நமது வாழ்க்கைப் பாதையை, எந்த விதத்தில் பகவான் வழி வகுத்துக் காட்டுகிறானோ, அந்த மார்க்கத்தில் நடத்திய படியே மூன்று தத்துவங்களை நாம் மறக்காமல் ஒரு நாளைக்கு ஒரு தரமாவது நினைத்துப் பார்க்க வேண்டும் ஸார்…