17
சாந்தியின் சிகரம்
இத்தனை நேரமும் ஜன்னலுக்கு வெளிப்புறம் நின்று, சகல விஷயங்களையும் கேட்டுக் கொண்டு நின்ற ஸ்ரீதரனுடைய மனத்தில், சற்றும் ஆத்திரமோ, கலக்கமோ உண்டாகவில்லை. உலகம் போகிற போக்கைப் பார்த்துத் தனக்கு இதுவும் ஒரு பாடமாகவே எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டான். தான் வந்து நிற்கும் ஜாடையைக் கூடக் காட்டிக் கொள்ளாமல், மேலும் என்ன நடக்கிறது பார்ப்போம் என்று மவுனமாக நின்றான்.
கமலவேணியின் கலக்கத்தில் பதில் பேசவே முடியாது தவித்தவாறு, “ஏற்கெனவே குழம்பித் தத்தளிக்கும் என் மனத்தை நீயும் கூடச் சேர்ந்து வாட்டாதேம்மா! எப்படித்தான் நீங்கள் சொன்னாலும், என் கண்மணி ஸ்ரீதரன் மீது என் மனம் சந்தேகமே கொள்ள மாட்டேனென்கிறது. என்னவிருந்தாலும், இத்தகைய விஷயங்களைச் சட்டுபுட்டென்று நம்பி மேல்கொண்டு, ஏதாவது செய்து விட்டால், பிறகு எத்தனையோ துன்பமாக முடியும்.
மூத்த மகன் ராஜாவைப் போல், அழகாயும், செல்வாக்குடனும் உலகோரால் போற்றப்படும் முறையிலும் இருக்கையில், அவனை விட்டு விட்டு, இளையவனுக்கு மணம் செய்து விட்டால், உலகம் என்ன நினைக்கும் தெரியுமா? மூத்தவனுக்கு ஏதோ கொடிய வ்யாதியோ, அன்றி யோக்யதை யற்று விட்டதோ, அன்றி வீரம் நிறைந்த ஆண் பிள்ளையில்லையோ என்கிற பலவிதமான கேள்விகளுக்கு இடம் உண்டாகும்; எப்படியாவது அவனைக் கெஞ்சிக் கூத்தாடி, மன்றாடிக் கேட்டுக் கொண்டு, தகுந்த பெண்ணைப் பார்த்து மணம் செய்வித்து, அவனுடைய நன்மையைக் கோருவேனே யன்றி, ஆத்திரப்பட்டு எதையும் செய்ய மாட்டேன்... தம்பீ!… நீயும் சற்று பொறுமையாயிரப்பா! உன் அண்ணா ஸாமான்யப் பட்டவனல்ல. அவனே உனக்குச் சரியான இடத்தில் பெண்ணைத் தேடி மணம்
சா-2