வை. மு. கோ. 103-வது நாவல்
18
செய்து வைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பதறாதே தம்பீ!” என்று மிகவும் சாந்தமாய்க் கூறினாள்.
முன்னிலும் அதிகமான ஆத்திரத்தையடைந்த தம்பி, பதிலே பேசாமல் தட,தடவென்று விறைப்புடன் சென்றான். கிருஷ்ணவேணியும் சென்று விட்டாள். தன் தாயின் உள்ளத் துடிப்பின் உச்சத்தையறிந்த ஸ்ரீதரனுக்கு, என்ன விதமாய் நாம் இந்த மகத்தான சோதனையிலிருந்து தப்ப முடியும்? எவ்வாறு என்னருமைத் தாயாருக்குப் பதில் சொல்ல முடியும்? என்ற மகத்தான கலக்கம் உண்டாகி விட்டது. தன் மீது அளப்பரிய அன்பை ஆழமாய் வைத்து, உருகும் தாயை இந்நிலைமையில் தனியாக விட்டுச் செல்லவும் மனமின்றித் தத்தளித்தான்.
சற்று முன்புதான் தாயின் தவிப்பை அறிந்து, மனத்தில் நன்றாகத் தோய்ந்திருக்கும் உணர்ச்சிக் கனல் மீண்டும் தலை தூக்கி நின்றது. தன்னுடைய அடிப்படையான லட்சியத்தின்—தீவிரமான தீர்மானத்தின் - முடிவைச் சிதைத்துக் கொலை செய்து, ஊழல் குப்பையில் ஊடாடுவது முக்யமா? பெற்ற தாயாரின் ஆழமான அனபிற்குக் கட்டுப்பட்டு, முன்னறி தெய்வமான அன்னையின் இதயத்தைக் குளிரச் செய்வது முக்யமா? இத்தகைய மகா சோதனையான தர்மசங்கடத்தில், அவன் உள்ளம் குழம்பித் தவிக்கிறது. உலகிற்கெல்லாம், சகல வ்யாதிகளுக்கும் மருந்து கொடுத்து, குணப்படுத்தும் சக்தி வாய்ந்த நான் என் தாயின் மனோவ்யாதியைக் குணப்படுத்தா விட்டால், நான் சண்டாளனிலும் கேடு கெட்ட சண்டாளனாக வன்றோ ஆய் விடுவேன். அந்தப் பாபத்தைச் செய்து விட்டு, நான் எனது லட்சிய ஸித்தி பெற்றால் மட்டும், மனச் சாந்தியை—சாந்தியின் சிகரத்தை— அடைய முடியுமா? அப்படி என்னுடைய லக்ஷ்யப்படிக்கு நான் செய்து முடித்தாலும், அதைக் கடவுள் ஏற்று மகிழ்ந்து, என்னை வாழ்த்தி என்னுடைய சகல மனோபீஷ்டத்தையும் நிறைவேற்றுவாரா? இதென்ன சோதனையின் கொடுமை?… ஐயோ! அம்மா,